மிக்ஸ்டு வெஜ் உசிலி கொழுக்கட்டை
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கிண்ணம் , பொடியாக நறுக்கி வேகவைத்த பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு - அரை கிண்ணம் பாசிப்பருப்பு


தேவையான பொருட்கள்:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கிண்ணம் , பொடியாக நறுக்கி வேகவைத்த பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு - அரை கிண்ணம் பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு (சேர்த்து) - கால் கிண்ணம், காய்ந்த மிளகாய் - 4 தேங்காய்த் துருவல் - 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பருப்புகளுடன் மிளகாயை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து, ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், வேகவைத்த காய்கறி, வேகவிட்ட பருப்பு, தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறி உசிலி தயார்.
இரண்டு கிண்ணம் நீருடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு, கைவிடாமல் கிளறி இறக்கவும். மாவை சீடை போல் சிறிது, சிறிதாக உருட்டி, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இதை காய்கறி உசிலியில் போட்டு புரட்டி எடுத்து பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...