அவல் வெங்காய ஊத்தப்பம்

அவலை பதினைந்து நிமிடங்ள் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
அவல் வெங்காய ஊத்தப்பம்
Updated on
1 min read

தேவையானவை:

சிகப்பு அவல் 200 கிராம்

அரிசி மாவு 2 மேசைக்கரண்டி

பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் தலா 4

இஞ்சி 1 துண்டு

சீரகம், மிளகுதலா 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

அவலை பதினைந்து நிமிடங்ள் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்க வேண்டும். சீரகம், மிளகு பொடிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்த அவல் மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, பொடித்து வைத்த மிளகு, சீரகம், தேவையான உப்பு போட்டு தோசை மாவு பதத்துக்கு நன்றாகக் கலக்க வேண்டும். இந்த மாவை தோசைக்கல்லில் ஊத்தப்பமாகவிட்டு வெந்தெடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com