உணவுப் பொருள்களில் பூச்சிகள் வராமல் இருக்க சில ஆலோசனைகள்:
பருப்பு வகைகளில் பெருங்காயத்தைத் தட்டிப் போட்டால் பூச்சிகள் வராது.
அரிசியில் மிளகாய் வற்றல் சிலவற்றைப் போட்டு வைத்தால், வண்டு பிடிக்காது.
உளுத்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால், மாவு மாதிரியான பொருள்கள் வெளியேறும். தட்டிய பிறகு டப்பாவில் வைத்தால் வண்டுகள் வராது,
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பில் பூச்சிகள் வராமல் இருக்க காய்ந்த வேப்பிலைகளையும், வசம்புத் துண்டுகளையும் போட்டு வைத்தால் போதும். உளுத்தம் பருப்பு எனில், மஞ்சள் தூளில், உப்பும் கலந்து வைக்கலாம்.
மிளகாய் பொடியில் வண்டுகள் வராமல் இருக்க, துணியில் சிறிது பெருங்காயத் துண்டை வைத்து மூட்டையாகக் கட்டி மிளகாய்ப் பொடி டப்பாலில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது.
பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்புத் தூள் கலந்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தினால் வண்டுகள், பூச்சிகள் கூடுகள் பிடிக்காது.
மைதா, ரவா டப்பாக்களில் கல் உப்பை ஒரு துணியில்போட்டு முடிந்து போடலாம். உலர்ந்த வேப்பிலையைப் போடலாம். கசக்காது, புழு பூச்சிகள் வராது. சுக்குத் தூளும் தூவலாம்.
புளியை வாங்கி வந்ததும், அதிலுள்ள கொட்டைகளையும் நார்களையும் நீக்கிவிட்டு நன்கு வெயிலில் காயவிட்டு சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் அடைத்துவிட்டால் ஓர் ஆண்டுக்கு மேல் புழுக்கள், பூச்சிகள் வராமல் இருக்கும்.
சர்க்கரை, இனிப்பு வகைகளில் எறும்பு வராமல் இருக்க, கொஞ்சம் கிராம்புகளை அதில் போட்டு வைக்கலாம்.
எள்டப்பாலில் சிறிது நெல்லைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூலை மலா்களால் அதிகரித்த வண்ணத்துப் பூச்சிகள்!

குடியிருப்புப் பகுதியில் பூச்சிகள் தொல்லை: கட்டுப்படுத்தும் பணி தீவிரம்

குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் சா்க்கரை அளவு: முறையாக கண்காணிக்க நாடாளுமன்றக் குழு வலியுறுத்தல்
வீட்டுக் குறிப்புகள்...
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


