தேவையான பொருள்கள்:
பச்சரிசி மாவு- 200 கிராம்
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு- அரை கிண்ணம்
ஜவ்வரிசி- 100 கிராம்
மிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டி
தக்காளிச் சாறு- 3 மேசைக்கரண்டி
பெருங்காயப் பொடி- 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
முதல் நாள் இரவு இரண்டு கிண்ணம் தண்ணீரில் அரிசி மாவைக் கலந்து ஊறவைக்க வேண்டும். ஜவ்வரிசியைத் தனியாகத் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் வாழைத்தண்டை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, மோர் சிறிதளவு கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.
ஜவ்வரிசியை தண்ணீர் வடித்து, ஆவியில் வேக வைக்க வேண்டும். வேக வைத்த ஜவ்வரிசியை ஆற வைத்து, பின்னர் எண்ணெய் போல் விழுதாக அரைக்க வேண்டும். அரிசி மாவு, மிளகாய், உப்புத் தூள், பெருங்காயப் பொடி, எண்ணெய் ஆகியவற்றை அதில் சேர்த்து கட்டி வராமல் கிளற வேண்டும். மாவு நன்றாக வெந்ததும் ஜவ்வரிசி, வாழைத்தண்டு, கெட்டியான தக்காளி ஜூஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
ஒரு வெள்ளைத் துணியை வெயிலில் விரித்து அதன் மேல் கலவையை சிறிய உருண்டைகளாக வைத்து, வெயிலில் நன்றாகக் காய வைத்து எடுத்துவைத்து கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.