12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

குட்டீஸ் கதை...

அசோக்ராஜா

Published On :

காட்டில் ராஜா சிங்கம், ஒரு ஆட்டை அழைத்து, 'என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச் சொல்'' என்றது.

ஆடு முகர்ந்துப் பார்த்துவிட்டு, 'ஆமாம்.. நாறுகிறது'' என்று சொல்லிவிட்டது. உடனே சிங்கம், 'முட்டாளே உனக்கு என்ன திமிர்'' என்று ஆடு மீது பாய்ந்து குதறியது.

அடுத்து சிங்கமானது ஒரு ஓநாயை அழைத்து, அதனிடம் கருத்தைக் கேட்டது. ஓநாய் முகர்ந்துப் பார்த்துவிட்டு, 'கொஞ்சம்கூட நாறவில்லை'' என்றது. இதற்கு சிங்கம், 'மூடனே பொய்யா சொல்கிறாய்?'' என்று கூறி அடித்துக் கொன்றது.

பின்னர் ஒரு நரியை அழைத்து, இதே கேள்வியை சிங்கம் கேட்டது. இதற்கு நரி, 'நாலு நாளா கடுமையான ஜலதோஷம். அதான் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை'' என்றது. உடனே நரியை சிங்கம்விட்டுவிட்டது.

இதில் இருந்து என்ன தெரியுது குட்டீஸ். ஆபத்துக் காலத்தில் புத்திசாலிகள் வாயைத் திறக்க மாட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.