தேவையான பொருள்கள்:
காய்ந்த பச்சை பட்டாணி - 1 கிண்ணம்
தண்ணீர் - 6 டம்ளர்
தேங்காய் எண்ணெய் - 4 தேக்கரண்டி
வெங்காயம் -1
உப்பு - தேவையான அளவு.
தேங்காய்ப்பால் - 2 கிண்ணம் (முதல் பால், இரண்டாம் பால் சேர்த்தது)
கொத்தமல்லி இலை - சிறிதளவு
அரைக்க:
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு பற்கள் - 10
பச்சை மிளகாய் - 4
தனியா தூள் - 2 தேக்கரண்டி
செய்முறை:
காய்ந்த பச்சை பட்டாணியை ஐந்து மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஆறு விசில் வரும் வரை வேகவைக்கவும். வாணலியில் அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி, அடுப்பை அணைத்து விட்டு தனியா தூள் சேர்த்து கலந்து இறக்கவும். அவை ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் இரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதங்கியதும், அதில் அரைத்த பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் வேகவைத்த பட்டாணியைச் சேர்த்து நன்றாக கிளறி, உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து மிதமான சூட்டில் வைக்கவும். மசாலா நான்கு நிமிடங்கள் கொதித்து பச்சை வாசனை போனதும், கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

