அழகுக் குறிப்புகள்...
வீட்டில் உள்ள காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருள்களைக் கொண்டு அழகைக் கூட்டலாம்.

பீட்ரூட்

பீட்ரூட்
வீட்டில் உள்ள காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருள்களைக் கொண்டு அழகைக் கூட்டலாம்.
பீட்ரூட்
பீட்ருட், காரட், தக்காளி ஆகியவற்றை தலா ஒன்று, கொஞ்சம் கருவேப்பிலையையும், இஞ்சியையும் போட்டு அரைத்து தினமும் ஒரு கிண்ணம் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் இளநரை போய்விடும்.
பீட்ரூட்டை தோல் சீவி, துருவி, விழுதாக அரைத்து சிறிது பார்லி பௌடர், லெமன் ஜூஸ் சிறிது சேர்த்து கலக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
பீட்ரூட்டை தோல் சீவி, துருவி விழுதாக அரைத்து கைகளில் தடவி, 5 நிமிடங்கள் மசாஜ் செய்து நன்கு காய்ந்தவுடன் கைகளைக் கழுவவும். தொடர்ந்து வாரம் 3 முறை செய்து வந்தால் கைகள் மென்மையாகும்.
தர்பூசணி
தர்பூசணியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும். இதனால் சருமம் பொலிவோடு இருக்கும்.
சருமத்தில் சுருக்கங்கள் அதிகம் இருந்தால், தர்பூசணியை அரைத்து முகத்தில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
தர்பூசணியை உட்கொண்டால் உடல் வறட்சி அடையாமல் இருப்பதுடன், அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்காது.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு:
சரும அழுக்குகளை நீக்க, வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கை தோல் நீக்காமல் அரைத்து, பின்னர், அதில் 1 முட்டை, சிறிது தயிர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
இளமைத் தோற்றத்தை தக்க வைக்க உருளைக்கிழங்கை அரைத்து, அதில் சிறிது ஆப்பிள் சாஸ் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
கண்களின் சோர்வை நீக்க, உருளைக்கிழங்கு துண்டுகளை சிறிதுநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, பின்னர் அதனை கண்களின் மேல் வைக்க வேண்டும். இதனை கண்கள் சோர்வுடன் இருக்கும்போது செய்தால், கண்களின் சோர்வானது உடனே நீங்கும்.
உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கி, கண்களின் மேல் 20 நிமிடங்கள் வைத்தால், நொதியானது கருவளையத்தைப் போக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...