இளைஞர் ஒருவரை அவரது காதலி மாற்றி யோசிக்கச் சொன்னதுடன் ஐடியா ஒன்றையும் அளித்துள்ளார். அதன்மூலம் இளைஞர் ஒரு வாரத்தில் நாற்பதாயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உலகம் முழுவதில் இருந்து ஆன்மிகப் பெரியோர்கள், பக்தர்கள் என கோடிக்கணக்கானவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்தக் கும்பமேளாவில் சில ஆயிரம் பேராவது காலையில் பல் துலக்க வேப்பங்குச்சியைப் பயன்படுத்துவார்கள்.
'
வேலையில்லாத நீங்கள் காலையில் சென்று வேப்பங்குச்சிகளை விற்றால் நல்ல வருமானம் கிடைக்கும்' என்று காதலி சொன்னதை மறுக்காமல் அக்கம்பக்கத்திலிருக்கும் வேப்ப மரங்களிலிருந்து பொருத்தமான குச்சிகளை சேகரித்தார் அந்த இளைஞர். இவ்வாறு வேப்பங்குச்சிகளை விற்று ஒரே வாரத்தில் அந்த இளைஞர் சம்பாதித்தது நாற்பதாயிரம் ரூபாய்.
மகா கும்பமேளாவில் பதினாறு வயது மோனாலிசா போஸ்லே பாசி மாலை விற்பனை செய்து சமூக ஊடகங்களில் வைரலானதைப் போலவே, இந்த இளைஞரும் வைரலாகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

"Get Out Of Here!" பாஜக பேரணியால் போக்குவரத்து நெரிசல்!அமைச்சரைத் திட்டிய பெண்ணால் பரபரப்பு!

அழகாகக் காதலைச் சொல்கிறேன் என்று கூறி காதலனை கட்டிவைத்து எரித்த காதலி!

நீதிக் கதைகள்! ஆசிரியரின் பெருந்தன்மை!

மகா ஸ்ரீ சற்குரு கணக்கம்பட்டி சுவாமிகள் குருபூஜை: திரளானோர் பங்கேற்பு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

