தேவையான பொருள்கள் :
புழுங்கல் அரிசி - 1 கோப்பை
நெய் , மிளகு - தலா 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு - தலா அரைக் கோப்பை
புளித்த தயிர் - ஒண்ணரைக் கோப்பை
முந்திரிப் பருப்பு, பச்சை மிளகாய் -தலா 10
இஞ்சி - 1 அங்குலத் துண்டு
கடுகு - அரைத் தேக்கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லி - 2 மேசைக் கரண்டி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும். கடைசியில் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதோடு கடைந்த புளித்த தயிர், அரிந்த கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகு ஆகியவற்றை சேர்க்கவும். இஞ்சி, பச்சை மிளகாயை ஆகியவற்றை அரைத்து சேர்க்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து, மாவில் சேர்க்கவும்.
நல்லெண்ணெயைச் சூடாக்கி கடுகைச் சேர்த்து பொரிந்ததும், பெருங்காயப் பொடி கலந்து இட்லிமாவில் சேர்க்கவும். பெரிய இட்லி தட்டில் வாழையிலையை வெட்டி உள்ளே வைத்து அதன் மேல் நல்லெண்ணெயைத் தடவி அதில் மாவை ஊற்றவும். குக்கரில் ஆவியில் வேக வைத்து (20 நிமிடங்கள் ) எடுக்கவும். பெரிய துண்டங்களாக வெட்டி சட்னி அல்லது மிளகாய்த் தூளுடன் பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.