வாழைத்தண்டு பஜ்ஜி
அகலமான பாத்திரத்தில் கடலைமாவைக் கொட்டி, அதனுடன் அரிசி மாவு, புளித்த தயிர், மிளகாய்த் தூள், உப்பு, ஓமத்தூள், பெருங்காயத்தைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.


தேவையான பொருள்கள்:
வாழைத்தண்டு- 1 துண்டு
எண்ணெய், பெருங்காயம், உப்பு- தேவையான அளவு
புளித்த தயிர்- 1 கிண்ணம்
மிளகாய்த் தூள்- 3 தேக்கரண்டி
ஓமப் பொடி- அரை தேக்கரண்டி
கடலை மாவு- கால் கிலோ
அரிசி மாவு- 1 மேசைக்கரண்டி
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் கடலைமாவைக் கொட்டி, அதனுடன் அரிசி மாவு, புளித்த தயிர், மிளகாய்த் தூள், உப்பு, ஓமத்தூள், பெருங்காயத்தைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். பின்னர், தேவையான அளவு தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும்.
வாழைத்தண்டை நார் நீக்கி, சுத்தம் செய்து வட்ட வடிவமாகவோ அல்லது வேண்டிய அளவில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானவுடன் வாழைத்தண்டு துண்டுகளை கரைத்த மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பஜ்ஜிகளாகச் சுட்டு எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...