நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

தனக்கு கிடைக்காவிட்டாலும்...

கால்பந்து வீராங்கனையாக வேண்டும்' என்ற கனவு நனவாகவில்லை. அதனால், பழங்குடியினச் சிறுமிகளுக்கு கால்பந்தாட்டத்தை இலவசமாகப் பயிற்றுவிக்கும் பயிற்சியாளராக மாறிவிட்டார் பாரதி.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:29 pm IST

'கால்பந்து வீராங்கனையாக வேண்டும்' என்ற கனவு நனவாகவில்லை. அதனால், பழங்குடியினச் சிறுமிகளுக்கு கால்பந்தாட்டத்தை இலவசமாகப் பயிற்றுவிக்கும் பயிற்சியாளராக மாறிவிட்டார் பாரதி.

பெண் பயிற்சியாளர்களும் ஆண் பயிற்சியாளரைப் போன்று டிரெளசர் அல்லது பேன்ட் - டீ ஷர்ட்டுகளையே அணிவார்கள். ஆனால், இவரோ 'சேலை' அணிந்து கால்பந்தாட்ட பயிற்சியாளராக இருக்கிறார்.

மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் உள்ள 'டும்டுமி' கிராமத்தைச் சேர்ந்த பாரதி கூறியது:

'2009-இல் எனது மகள் டானியா அளித்த ஊக்கத்தாலும், எனது விடாமுயற்சியாலும் கட்டணமில்லா கால்பந்து பயிற்சி மையத்தைத் தொடங்கினேன். தினமும் மாலை நேரங்களில் பந்தைக் கடத்துதல், பந்தை எடுத்துச் செல்லுதல், கோல் அடித்தல், தற்காப்பு ஆட்டம் ஆகியவற்றை நான் சிறுமிகளுக்குச் சொல்லித் தருகிறேன்.

பழங்குடியினத்தைச் சேர்ந்த நானும் கால்பந்து விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன். நான் எத்தனை ஆர்வத்துடன் இருந்தேனோ அதே ஆர்வத்துடன் நுணுக்கங்களைப் பயிற்றுவிக்கிறேன்.

குடும்பப் பொறுப்புகள், பண நெருக்கடிகள், பெண்கள் எதிர்கொள்ளும் வழக்கமான சமூகத் தடைகள் ஆகியன என்னை விளையாட்டிலிருந்து விலகிச் செல்ல வைத்தன. என்னைப் போலவே ஏராளமான பெண்கள் தங்களுடைய லட்சியங்களை, விருப்பங்களை ஒதுக்கி வைக்கின்றனர். 17 ஆண்டுகளில் பல சிறுமிகளின் வாழ்க்கையை வடிவமைத்திருக்கிறேன்.

சுமார் 24 சிறுமிகள் தொடர்ந்து பயிற்சிக்கு வருகிறார்கள். பல சிறுமிகளுக்கு, கால்பந்து மைதானத்தில் காலடி எடுத்து வைப்பதற்கே தைரியம் தேவைப்படுகிறது. என்னிடம் பயிற்சி பெற்றோர் மாநில அணிகளில் இடம்பிடித்துள்ளனர். சிலர் விளையாட்டுத் திறனின் மூலம் அரசு வேலைவாய்ப்புகளையும் பெற்றுள்ளனர்' என்கிறார் பாரதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.