தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று பேரவையில் தீா்மானம்மழைக்கால கூட்டத் தொடர் இறுதி வாரம்! முக்கிய மசோதாக்கள்: மத்திய அரசு தீவிரம்மருத்துவப் படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடுஅமைதி ஒப்பந்த நிபந்தனைகள் அமலாகாதவரை அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான்
/

பீர்க்கங்காய்த் துவையல்

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிளகாய், பருப்புகள், காயம், புளி ஆகியவற்றை வதக்கி எடுக்கவும்.

News image

பீர்க்கங்காய்த் துவையல்

Updated On :28 பிப்ரவரி 2026, 10:53 pm IST

தேவையான பொருள்கள்:

பீர்க்கங்காய்த் துண்டுகள்- 1கிண்ணம்

உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு- 2 மேசைக்கரண்டி

காய்ந்த மிளகாய்- 4

புளி- கொட்டைப் பாக்கு அளவு

காயம்- கால் மேசைக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- 2 மேசைக்கரண்டி

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிளகாய், பருப்புகள், காயம், புளி ஆகியவற்றை வதக்கி எடுக்கவும். அதே வாணலியில் பீர்க்கங்காய்த் துண்டுகளைப் போட்டு வதக்கவும். அதை நீர் சேர்க்காமல் வேகவிடவும். வெந்ததும் இறக்கிவிடவும். முதலில் பருப்பு, உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். பின்னர், பீர்க்கங்காயைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி துவையலாக அரைக்கவும். நல்லெண்ணெய் ஊற்றி சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கே. நாகலட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.