உணவுக்கு நறுமணம் ஊட்டுவதற்காக, கறிவேப்பிலையைச் சேர்ப்பார்கள். இதை சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து துவையல் செய்யலாம். இதை உணவுடன் உட்கொண்டால், ருசியின்மை, வயிற்றோட்டம், பித்த வாந்தி, உணவு செரியாமை, பித்த நோய்கள் போன்றவை குணமாகும். குடலுக்கும் பலத்தை அளிக்கும்.
கருப்பு உளுந்தில் தோசை மாவைப் புளிக்க வைக்கும் பாக்டீரியா அதிகமாகவும், தோல் நீக்கிய வெள்ளை உளுந்தில் குறைவாகவும் உள்ளது. இதனால் மாவு புளிப்பதில் வேறுபாடு ஏற்படுகிறது. எனவே, தோலோடுகூடிய உளுந்தையே ஊறவைத்து தோல் நீக்கிப் பயன்படுத்தினால் இட்லி பூ போன்று இருக்கும்.
அகத்திக் கீரையில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. இதனை அருந்தினால் குடல் புண், அரிப்பு, சொறி, சிரங்கு உள்ளிட்ட தோல் நோய்கள் குணமாகும். அகத்திக் கீரையை பச்சையாக மென்று சாற்றை உட்கொண்டால், தொண்டை நோய்கள் நீங்கும். உணவு செரிமானமாக அகத்திக் கீரை உதவும்.
அலர்ஜி உள்ளவர்கள் முலாம்பழம், ஆரஞ்சு சாப்பிடக்கூடாது. மூட்டு வலி உள்ளவர்கள் சப்போட்டா பழத்தைச் சாப்பிடக்கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொழுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோய்கள் பட்டியலில் சோ்க்க தில்லி அரசு திட்டம்!
சருமம் பளபளப்பாக... அழகுக் குறிப்புகள்!
வீட்டுக் குறிப்புகள்
சமையல் குறிப்புகள்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
