ரூ.13,000 கோடி வளா்ச்சித் திட்டங்கள்! சென்னையில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!இன்று மீண்டும் போராட்டம்: சிஜேபி அறிவிப்புபிரதமா் வருகை: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் ‘கிரீன் காா்டு’ விண்ணப்பங்கள் சரிவு!தில்லியில் இந்தியா கூட்டணி நாளை போராட்டம்: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு!ரஷியாவுடன் டீசல் கொள்முதலுக்கு அமெரிக்கா ஒப்பந்தம்!

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

வெள்ளைப் பட்டாணியை ஆறு மணி நேரம் தண்ணீர் விட்டு ஊற வைத்து, பின்னர் நீரை வடிகட்டி உப்பு சேர்த்து குழையாமல் குக்கரில் அல்லது தனியாகப் பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

Published On :

தேவையான பொருள்கள்:

வெள்ளைப் பட்டாணி- 100 கிராம்

சிறிய மாங்காய் -ஒன்று

மிளகாய் வற்றல் -ஐந்து

கடுகு, உளுந்தம் பருப்பு -ஒரு தேக்கரண்டி

தேங்காய் -ஒரு சிறிய மூடி

உப்பு ,எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

வெள்ளைப் பட்டாணியை ஆறு மணி நேரம் தண்ணீர் விட்டு ஊற வைத்து, பின்னர் நீரை வடிகட்டி உப்பு சேர்த்து குழையாமல் குக்கரில் அல்லது தனியாகப் பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு தாளித்தவுடன் வேகவைத்த பட்டாணியை சேர்க்க வேண்டும். தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். மாங்காயையும் அதேபோல் மெலிதாக சீவிக் கொள்ள வேண்டும். இரண்டையும் வேக வைத்த பட்டாணிக் கலவையில் நன்றாகச் சேர்த்து சுருள, கிளறி கறிவேப்பிலையை விழுதாக அரைத்து அதை கலந்து கீழே இறக்க வேண்டும்.

ஆர் .ஜெயலெட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.