நட்புறவுத் தூதர்
சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறை, இந்தியக் கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸை 'இந்தியாவுக்கான தனது புதிய நட்புறவுத் தூதராக' அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறை, இந்தியக் கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸை 'இந்தியாவுக்கான தனது புதிய நட்புறவுத் தூதராக' அறிவித்துள்ளது.
இந்தியப் பயணிகளுடனான சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறையின் நீண்டகாலப் பந்தத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை இந்த அறிவிப்பு எழுதியுள்ளது. பெங்களூருவில் சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறையின் தலைமைச் செயல் அதிகாரியான மார்ட்டின் நைடெகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தியர்கள் பல தலைமுறைகளாக சினிமா படப்பிடிப்பு, தேனிலவு, சுற்றுலா நிமித்தம் சுவிட்சர்லாந்துக்குச் சென்று வருகின்றனர். அதனால், இந்தியப் பயணிகளின் விருப்பப் பட்டியலில் கனவு பூமியாக சுவிட்சர்லாந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்தியப் பயணிகள் சுவிட்சர்லாந்து சென்று வருவது அதிகரித்து வருகிறது.
'நட்புறவுத் தூதர்' என்பவர், சுவிட்சர்லாந்தைச் சுற்றிப் பார்த்து தனது அனுபவத்தை தனது நாட்டு மக்களிடம் பங்கு வைப்பார். சுவிட்சர்லாந்தின் புதிய பக்கத்தை தனது நாட்டு பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவார்.
இந்தியர்கள், பொதுவாக, ஏப்ரல் முதல் ஜூன் வரை நீளும் கோடைக்காலத்தில் மட்டுமே அதிக அளவில் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்கின்றனர். அந்த வழக்கத்தை மாற்றும் விதமாக, ஆண்டு முழுவதும் இந்தியர்களை சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலாவுக்காக வரவழைப்பதற்காக ஜெமிமாவை நட்புறவுத் தூதுவராக நியமித்துள்ளனர்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ், இந்திய இளைய தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். நட்புறவுத் தூதராக, ஜெமிமா சுவிட்சர்லாந்தின் மூலை முடுக்குகளைச் சுற்றிப் பார்த்து, அந்நாட்டின் கலாசார அனுபவங்கள், சாகச விளையாட்டுகள், அதிகம் அறியப்படாத அழகிய சுற்றுலாத் தலங்களைத் தனக்கே உரிய பாணியில் இந்தியப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவார்.
இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் பல ஆண்டுகளாக சிறப்பான உறவைப் பகிர்ந்து வருகின்றன. தவிர, இந்தியர்களின் பணம் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பல ஆயிரம் கோடிகள் குவிந்து கிடக்கின்றன. அதனால் சுவிட்சர்லாந்தின் வருமானம், பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியர்கள் உரமாகத் திகழ்வதால், இந்தியர்கள் என்றாலே சுவிட்சர்லாந்தில் தனி மதிப்பு.
இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்குப் பெருமை. நான் எங்கு சென்றாலும், என் தாயகத்தின் பண்பாட்டை என்னுடன் எடுத்துச் செல்கிறேன். இந்தப் புதிய பொறுப்பின் மூலம், சுவிட்சர்லாந்தை நாம் ஏற்கெனவே அறிந்த மற்றும் நேசிக்கும் விஷயங்களுக்கு அப்பால், புதிய கோணங்களில் கண்டறியும் வாய்ப்பு கிடைக்கும்.
அது எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. புதிய மனிதர்களைச் சந்திப்பதற்கும், புதிய விஷயங்களை முயற்சிப்பதற்கும், பல்வேறு இடங்களை ஆராய்வதற்கும், அந்த அனுபவங்களை என் நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் நான் ஆவலாக உள்ளேன்' என்கிறார் ஜெமிமா.
இந்த ஒப்பந்தக் காலத்தின்போது, ஜெமிமா சுவிட்சர்லாந்தை நான்கு பருவ காலங்களிலும் பயணித்து, அதன் பன்முகத்தன்மையை அனுபவிப்பார். அங்குள்ள புகழ்பெற்ற இடங்கள் மட்டுமன்றி, மறைந்திருக்கும் பொக்கிஷங்களையும் கண்டறிந்து, சுவிட்சர்லாந்தைப் புதிய கோணத்தில் இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்துவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

