ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

இசை எங்கள் உயிருக்கு நேர்...

உலகில் இசைக்கு மயங்காதோர் இல்லை.

Updated On :

உலகில் இசைக்கு மயங்காதோர் இல்லை. இசையின் மீது தீராத காதல் கொண்டு, அரபு நாட்டில் பிறந்தாலும் தமிழ் இசை, கர்நாடக சங்கீதம், வீணை, வயலின், தம்புரா போன்ற வாத்தியக் கருவிகளைக் கற்றறித்து இசை சகோதரிகளாக வலம் வருகின்றனர் மௌத்திகா, கமலிகா.

நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட ராசிபுரம் வட்டம், பாச்சல் கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்ட மணிகண்டன், லாவண்யா தம்பதியர் குவைத் நாட்டில் வசித்துவருகின்றனர். இவர்கள் தங்கள் மகள்கள் மௌத்திகா, கமலிகாவுக்கு இசையைப் பயிற்றுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சாதித்தும் உள்ளனர்.

பத்மபூஷண் விருது பெற்ற கர்நாடக இசைப் பாடகி டாக்டர் சுதா ரகுநாதன் தலைமையில் ராசிபுரத்தில் இந்த இசை சகோதரிகளின் அரங்கேற்றமும் நடந்தேறியது.

'கர்நாடக இசைப் பாடகியாக வரவேண்டும்' என்பது பத்தாம் வகுப்பில் பயிலும் மௌத்திகாவின் விருப்பமாகவும், 'வீணை, வயலின் இசைக் கலைஞராக வேண்டும்' என்பது ஆறாம் வகுப்பில் பயிலும் கமலிகாவின் ஆர்வமாகவும் உள்ளது.

இதுகுறித்து இசைச் சகோதரிகளிடம் பேசியபோது:

'எனது தந்தை மணிகண்டன் குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராகவும், தாய் லாவண்யா, குவைத் அரசின் பெட்ரோலியத் துறையிலும் பணியாற்றி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் பணி நிமித்தமாக பெற்றோர் குவைத்துக்குச் சென்றனர்.

சிறுவயது முதலே எங்களுக்கு இசை மீது ஆர்வம் உண்டு. அனுராதா வெங்கடகிருஷ்ணன், சாரதா ராகவ், கே.என்.கிருஷ்ணா, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கொள்ளுப்பேத்தி ஐஸ்வர்யா ஆகியோர் எங்களுடைய குருமார்கள். பாட்டு, வீணை, வயலின் உள்ளிட்டவற்றையும் கற்றுள்ளோம்.

2024-ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் முதல் குவைத் பயணத்தின்போது நடைபெற்ற 'ஹாலா மோடி' நிகழ்ச்சியில் அவரை வரவேற்கும் விதமாக வீணை, வயலின் மூலம் தீம் மியூசிக் இசைத்து மகிழ்ந்தோம். குவைத் அரசு எங்கள் இருவருக்கும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டியது. பாதுகாப்புக் காரணங்களால் பிரதமருடன் இணைந்து புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எப்படியும் சந்திப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

தந்தை ராசிபுரம், தாய் திருச்சியைச் சேர்ந்தவர் என்பதால், தமிழ்நாட்டில் எங்களுடைய இசை அரங்கேற்றம் செய்ய நாங்கள் விரும்பி, ராசிபுரத்தில் விழா நடைபெற்றது. மாதே மலையத்வஜ, ஸ்ரீமன் நாராயணா, பண்டு ரீத்தி, சங்கராபரணம் ஆலாபனை, கல்பனா ஸ்வரம், கர்நாடக சங்கீதங்கள், குறை ஒன்றுமில்லை, அலைபாயுதே கண்ணா, அழகான பழனிமலை ஆண்டவா ஆகிய பாடல்களைப் பாடினோம்.

'உங்களுக்கு கர்நாடக சங்கீதம் நன்றாக வருகிறது' என சுதா ரகுநாதன் எங்களைப் பாராட்டி பரிசு வழங்கினார். இசையோடு ஓவியம் வரையவும் கற்றுக்கொண்டுள்ளோம். குவைத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளைப் பெற்றுள்ளோம். அங்கு உயரிய விருதான 'வாத்ய பிரஹ்யா' விருது கிடைத்துள்ளது.

எங்களுடைய முன்னேற்றத்துக்கும், வெற்றிக்கும் முழு முதற்காரணம் பெற்றோர்தான். அவர்களுடைய ஆசை, கனவுகளை நிறைவேற்ற வேண்டும்.

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைந்து பாடும் பஞ்சரத்ன கீர்த்தனைகளை நாங்களும் அவர்களுடன் இணைந்து பாட வேண்டும் என்கிற ஆவல் அதிகம் உள்ளது' என்றனர் இருவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.