எனர்ஜி லட்டு
அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, சூடானதும், கேழ்வரகு மாவைப் போட்டு, நன்கு வாசனை வரும் வரை, பொன்னிறமாக வறுக்கவும்.
தேவையான பொருள்கள்:
கேழ்வரகு மாவு, பேரீச்சை,
வேர்க்கடலை, உலர் திராட்சை -
தலா 1 கிண்ணம்
ஏலக்காய் - 6
பட்டை - 1 இஞ்ச் அளவு
செய்முறை:
அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, சூடானதும், கேழ்வரகு மாவைப் போட்டு, நன்கு வாசனை வரும் வரை, பொன்னிறமாக வறுக்கவும். தொடர்ந்து, கிளறிக் கொண்டே இருந்தால், அடி பிடிக்காமல், ஒரே சீராக வறுபடும். வறுத்த மாவை, வேறு பாத்திரத்தில் மாற்றி, ஆற வைக்கவும். பேரீச்சம்பழத்தை, விதை நீக்கி, வைத்துக் கொள்ளவும்.
வேர்க்கடலையை இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் நீரை வடித்துவிட்டு, வெறும் வாணலியில், லேசாக வறுத்துக் கொள்ளவும். மிக்சியில், பேரீட்சை துண்டுகள், உலர் திராட்சை, பட்டை, வேர்க்கடலை, ஏலக்காய் விதைகளைப் போட்டு, நன்கு அரைத்து, இதில், வறுத்து, ஆறிய கேழ்வரகு மாவையும் போட்டு, நன்கு அரைத்து, இந்தக் கலவையை, சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
இந்த அளவில், 18 - 20 எனர்ஜி லட்டுகள் கிடைக்கும். தேர்வு சமயத்தில் குழந்தைகளுக்குக் கொடுத்தால், சக்தியைத் தரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




