மேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குபொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வுகரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு எனது அஞ்சலி: கனிமொழி பதிவு!ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது: டிரம்ப்தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான் நீடிக்கும்: திருமாவளவன்எல் நினோ! தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்!

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?

'மனிதர்கள் ஒவ்வொருவரும் விரும்பும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைவது எப்படி?'

Published On :

'மனிதர்கள் ஒவ்வொருவரும் விரும்பும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைவது எப்படி?' என்பதைக் கண்டுபிடிக்க 66 நாடுகளைச் சேர்ந்த 97 ஆயிரத்து 220 பேரிடம் ஆய்வு ஒன்றை 'வோர்ல்ட் வேல்யூஸ் சொஸைடி' எனும் அமைப்பு அண்மையில் நடத்தியது. அதன் முடிவுகளை 'போலிஷ் அகாதெமி ஆஃப் ஸயின்ஸஸ்' நடத்தும் உளவியல் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஈவா பாலிகாட் 'தி ஜர்னல் ஆஃப் பாஸிடிவ் சைக்காலஜி' என்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்.

'ஒரு தனி மனிதனின் சந்தோஷம் மட்டும் ஒரு சமூகத்தின் மொத்த சந்தோஷமாக மாறிவிட முடியாது. சில சமயம் ஒரு தனி மனிதன் தனது எதிர்மறை எண்ணங்களை வெளியிட்டு, தனக்கு இருக்கும் ஏமாற்றம், மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுபடுகிறான். தனி மனித சந்தோஷம் மொத்த சமுதாயத்தின் சந்தோஷமாக மாற வேண்டும். இதை எப்படி அடைவது என்பதே ஆராய்ச்சியின் முக்கிய குறிக்கோள்' என்கிறார் ஈவா பாலிகாட்.

ஆய்வாளர்கள் 200 வெவ்வேறு விதமான சமூக, உளவியல் காரணங்களை முதலில் அலசி ஆராய்ந்தனர். அறிவியல் பூர்வமான தரவுகள் இதற்கெனத் தயாரிக்கப்பட்டன. வயது, பால், கல்வி, சமூக அந்தஸ்து உள்ளிட்ட அம்சங்கள் சரிபார்க்கப்பட்டன. 56 காரணிகளைத் தொகுத்து அவற்றை ஐந்து ஊக்குவிக்கும் அம்சங்களாகப் பிரித்தனர். முடிவு வருமாறு:

ஒரு தேசத்தின் மொத்த நலமானது அனைத்துக் குழுவினரும் ஒன்றாக இணையும்போதே ஏற்படுகிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒருவர் இன்னொருவருக்கு உதவும்போது சந்தோஷம் எல்லையற்ற அளவுக்கு உயர்கிறது. மற்றவர்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்போது, ஒருவரின் சந்தோஷமும் அதிகரிக்கிறது.

ஈவா பால்காட்டின் இந்த ஆய்வு முடிவு சந்தோஷத்தை விரும்பும் ஒரு சமூகம் முக்கிய ஐந்து அம்சங்களின் மீது கவனம் செலுத்தி அவற்றை நல்ல முறையில் ஊக்குவித்து வளர்க்க வேண்டும் என்கிறது. உதவி வாழும் சமுதாயமே அதிகபட்ச மகிழ்ச்சியுடன் வாழும் சமுதாயம் என்பது அறிவியல்பூர்வமாக அறியப்பட்டது.

'தனி மனித வளர்ச்சிக்கு ஒரு சமூகம் உதவுகிறதா? ஆண், பெண் சமத்துவமானது மைனாரிடியாக உள்ள சமுகத்தினரை ஏற்றுக் கொள்வது?' என்பது இதில் அடங்கும். உதவுகிறது என்பதை ஆய்வின் முடிவில் கண்டனர்.

இரண்டாவது அம்சம், விழிப்புணர்வூட்டும் கருத்துகளையும் அதற்கான நிறுவனங்களையும் ஆதரிக்கிறதா?, பாரம்

பரிய வழிமுறைகளோடு நவீன யுகத்தின் பகுத்தறிவு, படைப்பாற்றல் அறிவு ஆகியவற்றை சமூகம் ஆதரிக்கிறதா? என்று ஆய்வாளர்கள் ஆய்ந்தனர். நவீன உத்திகளைக் கடைப்பிடிப்பதானது தனிமனிதனின் சந்தோஷத்தையும் சமூகத்தின் சந்தோஷத்தையும் அதிகரிக்கிறது என்பதைக் கண்டனர்.

மூன்றாவது அம்சமாக மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, தங்குமிடம் ஆகியன திருப்தியாக இருக்கிறதா? என்பது தான். இவை அனைத்தும் ஒருவருக்கு திருப்தியாக அமைந்து விட்டதெனில், அந்த நபர் மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்கிறார் என்பதே ஆய்வின் முடிவு.

நான்காவது அம்சமாக நிர்வாக, பாதுகாப்பு நிறுவனங்கள் நன்கு இயங்குகிறதா? என்பதாகும். காவல் துறை, வங்கிகள், நீதிமன்றங்கள் ஆகியன நன்கு இயங்கும்போது அவை ஒரு தனிமனிதனின் சந்தோஷத்தை மிகவும் அதிகரிக்கின்றன என்பது கண்டறியப்பட்டது.

ஐந்தாவது அம்சம் குழுவாக இயங்குவதாகும். ஒரு மனிதன் தனது அண்டை வீட்டாருடன் நெருக்கமாகப் பழகும்போது அவன் சந்தோஷம் அதிகமாகிறது. ஆனால், உள்ளூர் பற்று அளவுக்கு மீறி அதிகமாகும்போது அது சமூகத்தில் பிளவை உண்டாக்குகிறது என்கிறது ஆய்வின் முடிவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.