அம்மா கொடுத்த தின்பண்டம்
அண்ணன் தம்பி பகிர்ந்துண்ண;
தம்பிப் பயலவன் அண்ணனுடன
தனக்கே வேண்டி வாதிட்டான்! அப்பா அம்மா அறிவுரைகள
அடித்துச் சொல்லியும் கேட்கவில்லை
தப்பா நடக்கும் பிள்ளைகள
தட்டிக் கொடுத்தும் திருந்தவில்லை! அன்னை தினமும் அன்னத்த
அன்பாய் மாடியில் வைத்திடுவாள்
தின்ன அந்தக் காகங்கள
காகாவென்றே அழைத்திடுவாள்! உணவைக் கண்ட காகமத
உண்ணத் தனியே செல்லாமல்
இனத்தைக் கரைந்து அழைத்தனவ
இணைந்து உண்டு மகிழ்ந்தனவே! பகிர்ந்து உண்ணும் காகத்த
பார்த்து வியந்த சகோதரர்கள
பகிர்ந்து உண்ணும் பண்பதன
மாண்புடன் கற்று நடந்தனரே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.