
தீராத விளையாட்டுப் பிள்ளைகள்- சிறுவர் பாடல்
குட்டிக் குட்டிப் பிள்ளைகள் கூடிச் சிரிக்கும் முல்லைகள் சுட்டித் தனமே பண்ணுவோம் சேர்ந்து பண்டம் தின்னுவோம்! பட்டம் விட்டுப் பார்ப்போமே பலரை ஒன்றாய்ச் சேர்ப்போமே திட்டி விரட்டும் பெரியோர்க்கு தொந்தரவின

குட்டிக் குட்டிப் பிள்ளைகள்
கூடிச் சிரிக்கும் முல்லைகள்
சுட்டித் தனமே பண்ணுவோம்
சேர்ந்து பண்டம் தின்னுவோம்!
பட்டம் விட்டுப் பார்ப்போமே
பலரை ஒன்றாய்ச் சேர்ப்போமே
திட்டி விரட்டும் பெரியோர்க்கு
தொந்தரவின்றி இருப்போமே!
விட்டும் தொட்டும் ஓடிடுவோம்
வீடுகள் புகுந்து ஆடிடுவோம்
கொட்டும் மழையை ரசிப்போமே
குட்டிப் படகுகள் விடுவோமே!
கார்ட்டூன் டிவி எப்போதும்
சுகமாய்ப் பார்த்தால் தப்பேது?
மிட்டாய் வாங்கிக் கடிப்போமே
மேலும் நன்றாய்ப் படிப்போமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






