சிறுவர் பாடல்: காய்கறி!
வெண்டைக்காய் குழம்புக்காய் விரும்பி வாங்கும் முருங்கைக்காய் சுண்டைக்காய் சாம்பார்க்காய் சிரிக்குது பாரு கத்தரிக்காய்! கொம்புக்காய் பாகற்காய் குடலை சுத்தம் செய்யும் காய் பிஞ்சுக்காய் புடலங்காய் பிடியேன


வெண்டைக்காய் குழம்புக்காய்
விரும்பி வாங்கும் முருங்கைக்காய்
சுண்டைக்காய் சாம்பார்க்காய்
சிரிக்குது பாரு கத்தரிக்காய்!
கொம்புக்காய் பாகற்காய்
குடலை சுத்தம் செய்யும் காய்
பிஞ்சுக்காய் புடலங்காய்
பிடியேன் ஒன்று கூட்டுக்காய்!
பட்டைக்காய் பொரியலுக்காய்
பந்தலில் காய்த்த அவரைக்காய்
குட்டிக்காய் பூசணிக்காய்
கொழு கொழு மோரு குழம்புக் காய்!
நயமான விலையினிலே
நானே தருவேன் நல்லகாய்
தயங்காதே வாங்கிக்கோ
தருணம் விட்டால் இல்லை காய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...