/

வர்ணஜாலம்!

வான வில்லைப் பாருங்கள் வண்ணப் பாலம் போடுது! நாணல் போல வானிலே வளைந்து வண்ணம் கூடுது! மழையின் மேகம் தன்னிலே மாய வில்லும் தெரியுது! கலை மகளும் வரைந்திடும் காட்சி வானில் விரியுது! மஞ்சள், நீலம், சிகப்புமே

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:35 pm

ரமண ராஜசேகர்

வான வில்லைப் பாருங்கள்

வண்ணப் பாலம் போடுது!

நாணல் போல வானிலே

வளைந்து வண்ணம் கூடுது!

மழையின் மேகம் தன்னிலே

மாய வில்லும் தெரியுது!

கலை மகளும் வரைந்திடும்

காட்சி வானில் விரியுது!

மஞ்சள், நீலம், சிகப்புமே

மகிழ்ந்து ஒன்றாய் சேருது!

கொஞ்ச நேரம் கூடிய

கோலம் ஏழாய் மாறுது!

மழைக்கு முன்னும் பின்னுமே

மாய வில்லும் வளருது!

விலைக்கு வாங்க ஓவியம்

விண்ணில் வந்து மலருது!

ஏணி வைத்து ஏறியே

ஏழு வண்ணம் தேடுவோம்! - கலை

வாணி வீட்டு வாசலின்

வண்ணக் கோலம் காணுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.