சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

குழந்தைப் பாடல்: ஒட்டகம்

 உயர்ந்த விலங்கு ஒட்டகத்தை  ஓடி வந்து பாருங்கள்!  நிமிர்ந்த கழுத்து நீண்ட தலை  நிற்கும் அழகைப் பாருங்கள்!    சாது இந்த விலங்கு என்றும்  சப்தம் செய்வ தில்லையே!  ஏதும் துன்பம் செய்திடாமல்  எட்டி நின்று

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:18 am

 உயர்ந்த விலங்கு ஒட்டகத்தை

 ஓடி வந்து பாருங்கள்!

 நிமிர்ந்த கழுத்து நீண்ட தலை

 நிற்கும் அழகைப் பாருங்கள்!

 சாது இந்த விலங்கு என்றும்

 சப்தம் செய்வ தில்லையே!

 ஏதும் துன்பம் செய்திடாமல்

 எட்டி நின்று பாருங்கள்!

 வளைந்த முதுகு வாலிருக்கு

 வந்து நீங்கள் பாருங்கள்!

 திறந்த வாயில் பெரிய பற்கள்

 தெரியும் வந்து பாருங்கள்!

 பாலை வனத்தின் கப்பலிதனை

 பார்க்க ஓடி வாருங்கள்!

 கோலும் இல்லை துடுப்புமில்லை

 கடக்கும் தூரம் பாருங்கள்!

 எந்த விலங்கு என்றபோதும்

 அன்பு காட்டல் வேண்டுமே!

 வம்பு தும்பு செய்திடாமல்

 வாழ வைப்போம் என்றுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.