புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

செக்கிழுத்த சிதம்பரனார்

தாய்நாடு காக்க வேண்டி தனதுபொருள் இழந்தவர் யாரு? பாய்மரக் கப்பல் ஓட்டி பண்பாளர் சிதம்பரம் அவர் பேரு! வழக்கறிஞர் தொழிலை விட்டு வருத்தமின்றி சிறைசென்ற தாரு? முழக்கமிட்டு நாட்டுக்காக முனைந்திட்ட சிதம்பரம்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:50 am IST

தாய்நாடு காக்க வேண்டி

தனதுபொருள் இழந்தவர் யாரு?

பாய்மரக் கப்பல் ஓட்டி

பண்பாளர் சிதம்பரம் அவர் பேரு!

வழக்கறிஞர் தொழிலை விட்டு

வருத்தமின்றி சிறைசென்ற தாரு?

முழக்கமிட்டு நாட்டுக்காக

முனைந்திட்ட சிதம்பரம் அவர் பேரு!

செல்வங்களை இழந்து அன்று

செக்கடியில் துன்பப்பட்ட தாரு?

நல்வழியில் நடந்து சென்று

நாட்டுக்குழைத்த சிதம்பரம் அவர் பேரு!

அல்லல்பட்டும் அவதிபட்டும்

அறவழியில் நடந்தவர் யாரு?

நல்ல மனம் நலிந்தபோதும்

நடைபோட்ட சிதம்பரம் அவர் பேரு!

திலகர்வழி தினமும் சென்று

திருக்குறளாய் வாழ்ந்ததிங்கு யாரு

கலகம் செய்து வெள்ளையரைக்

கதறவைத்த சிதம்பரம் அவர் பேரு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.