தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நல்லது...

ஒருநாள் ரமண மகரிஷி தமது சீடர்கள் தொடர்ந்து வர, ஒரு தெரு வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அந்தத் தெருவின் நடுவே, ஒரு நாய் அடிபட்டு, அலங்கோலமாக இறந்து கிடந்தது. அதன் தோற்றத்தைக் கண்ட சீடர்கள் அனைவரும

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:45 pm

அ.கருப்பையா

ஒருநாள் ரமண மகரிஷி தமது சீடர்கள் தொடர்ந்து வர, ஒரு தெரு வழியே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்தத் தெருவின் நடுவே, ஒரு நாய் அடிபட்டு, அலங்கோலமாக இறந்து கிடந்தது.

அதன் தோற்றத்தைக் கண்ட சீடர்கள் அனைவரும் முகத்தைச் சுளித்தனர்.

ஆனால், ரமணர் முகத்திலோ எந்தவித மாற்றமும் இல்லை.

இதைக் கண்டு வியந்த சீடர்களில் ஒருவர், ""சுவாமி, அந்த நாயின் காட்சி எவ்வளவு அருவருப்பாக இருக்கிறது?'' என்று கேட்டார்.

மகரிஷி அமைதியாக அவரை நோக்கி, ""அந்த நாயின் பற்கள் எவ்வளவு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கின்றன?'' என்று பதிலுக்குக் கேட்டார்.

சீடர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

சிறிது தொலைவு சென்றதும், மகரிஷி மீண்டும், ""நம் உள்ளம் நல்லதாக இருந்தால் உலகில் நாம் பார்க்கும் மனிதர்களும் பொருள்களும் நல்லதாகவே காணப்படும்!'' என்றார்.

சீடர்கள் தங்களை எண்ணி வெட்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.