டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆசிரியர் தினம்

பேர்மிகு இந்தியக் குடியரசின் பெருமை மிகுந்த தலைவரெனும் சீர்மிகு பதவிக்குச் சிறப்புதனைச் சேர்த்தவர் இராதா கிருட்டிணராம்! உத்தம மான ஆசிரியர் உழைப்பால் உயர்ந்த மாமனிதர் தத்துவம் பயின்ற மேதையவர் தகைசால் ச

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:02 am

தளவை இளங்குமரன்

பேர்மிகு இந்தியக் குடியரசின்

பெருமை மிகுந்த தலைவரெனும்

சீர்மிகு பதவிக்குச் சிறப்புதனைச்

சேர்த்தவர் இராதா கிருட்டிணராம்!

உத்தம மான ஆசிரியர்

உழைப்பால் உயர்ந்த மாமனிதர்

தத்துவம் பயின்ற மேதையவர்

தகைசால் சிந்தனை வாதியவர்!

அன்னார் பிறந்த செப்டம்பர்

அய்ந்தாம் தேதியை நன்றியுடன்

இந்நா டாசிரியர் தினமாய்

ஏற்றுப் போற்றி வருகிறதாம்!

அந்நா ளதனில் மாணவர்கள்

ஆணித் தரமாய்ச் சூளுரைப்போம்

எந்நா ளும்இந் நாடுயர

ஏணிப் படியாய் நாமிருப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.