தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பணமொழிகள்

1. எல்லாத் தீமைகளுக்கும் வேர் பண ஆசை! - பைபிள் 2. பணம் பானையை அடுப்பில் ஏற்றுகிறது! - இங்கிலாந்து 3. பணம் பேசத் தொடங்கினால் உலகம் வாயை மூடிக் கொள்ளும்! - எஸ்டோனியா 4. பணம் அறிவாளர்களுக்கு அடங்கித் தொண

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:02 am

செவல்குளம் ஆச்சா

1. எல்லாத் தீமைகளுக்கும் வேர் பண ஆசை! - பைபிள்

2. பணம் பானையை அடுப்பில் ஏற்றுகிறது! - இங்கிலாந்து

3. பணம் பேசத் தொடங்கினால் உலகம் வாயை மூடிக் கொள்ளும்! - எஸ்டோனியா

4. பணம் அறிவாளர்களுக்கு அடங்கித் தொண்டு செய்யும்; ஆனால் மூடர்களை ஆட்சி செய்யும்! - பிரான்ஸ்

5. பணம் உள்ளவனுக்குப் பயம்; இல்லாதவனுக்கு வருத்தம்! - ஜெர்மனி

6. பணம் வரும்போது இரண்டு கால்களுடன் வரும்; போகும்போது பல கால்களுடன் போகும்! - ரஷ்யா

7. பண விஷயத்தில் எல்லோரும் ஒரே மதம்தான்! - வால்டேர்

8. பணம் எனக்கு வேண்டும்; உபதேசம் வேண்டாம்! - போர்ச்சுக்கல்

9. பணம் பெருகும்போது பணத்தின் ஆசையும் பெருகும்! - லத்தீன்

10. எந்த முட்டாளும் பணம் சம்பாதிக்கலாம்; அறிவாளிதான் அதைக் காக்க முடியும்! - அமெரிக்கா

11. பணம் பத்தும் செய்யும்! - இந்தியா

12. பணம் பாதாளம் வரை பாயும்! - இந்தியா

13. பணமில்லாதவன் பிணம்! - இந்தியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.