தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முத்துக் கதை: எங்கே நிம்மதி?

ஓரு மன்னன் அண்டை நாடுகளையெல்லாம் வென்று தனது ஆட்சியின் கீழ் கொண்டு வர முடிவு செய்தான். படையெடுத்துச் செல்வதற்கு முன்னர் தனது குருவிடம் ஆசி பெறச் சென்றான். அவனிடம் குரு, "முதலில் எந்த நாட்டுக்குச் செல்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:30 pm

செவல்குளம் ஆச்சா

ஓரு மன்னன் அண்டை நாடுகளையெல்லாம் வென்று தனது ஆட்சியின் கீழ் கொண்டு வர முடிவு செய்தான். படையெடுத்துச் செல்வதற்கு முன்னர் தனது குருவிடம் ஆசி பெறச் சென்றான்.

அவனிடம் குரு, "முதலில் எந்த நாட்டுக்குச் செல்லப் போகிறாய்?' என்று கேட்டார்.

"கலிங்க நாட்டுக்கு...'

"அடுத்து..?'

"மாளவம், அங்கம், வங்கம்...' என்று வரிசையாகச் சில நாடுகளின் பெயர்களைக் கூறினான்.

குரு புன்னகை செய்தபடி, "இத்தனை நாடுகளையும் வென்றபிறகு என்ன செய்யப் போகிறாய்?' என்று வினவினார்.

"அதன்பிறகு நிம்மதியாக எனது நாட்டில் இருப்பேன்..!' என்றான் மன்னன்.

"அப்படியானால் நீ, ஏன் இவ்வளவு நாடுகளுக்கும் படையெடுத்துச் சென்று சிரமப்பட வேண்டும்? இப்போது நீ இருக்கும் நிலையிலேயே உனது நாட்டில் நிம்மதியாக இருக்கலாமே? நிம்மதிதானே உனக்கு வேண்டும்! அதை இப்போதே செய்து விடேன்' என்றார் குரு.

மன்னன் பதிலேதும் சொல்லாமல், போருக்குச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டுத் திரும்பினான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.