பூமாலை
வண்ண வண்ண பூக்கள் வாச முள்ள பூக்கள் கண்ணைக் கவரும் பூக்கள் கடவுள் தந்த பூக்கள் நாரில் பூவைக் கட்ட நல்ல மாலை யாகும் தேரில் வரும் சாமி தோளில் சூடப் போகும் கோடிப் பூக்கள் நித்தம் கோர்க்க மாலை யாகும் தேடி


வண்ண வண்ண பூக்கள்
வாச முள்ள பூக்கள்
கண்ணைக் கவரும் பூக்கள்
கடவுள் தந்த பூக்கள்
நாரில் பூவைக் கட்ட
நல்ல மாலை யாகும்
தேரில் வரும் சாமி
தோளில் சூடப் போகும்
கோடிப் பூக்கள் நித்தம்
கோர்க்க மாலை யாகும்
தேடி மக்கள் கூட்டம்
வாங்கித் தலையில் சூடும்
நாட்டில் தலைவர் தோளை
நாடிப் பெருமை சேர்க்கும்
வீட்டில் சாமி படத்தில்
விழுந்து பக்தி ஈர்க்கும்
வாழும் நாட்கள் கொஞ்சம்
வாசம் தந்து செல்லும்
ஞாலம் முழுதும் பரவி
நன்மை தன்னைச் செய்யும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...