சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பறவையைத் தொடர்வோம்...

* ஊதாப்பிட்டு தேன்சிட்டு    இது சிட்டுக்குருவியை விட சிறியது. மலர்களில் உள்ள தேனைக் குடித்து வாழும் பறவை. இது தேனைக் குடிக்கும் அழகே தனி. இதன் அலகு பூக்களுக்குள் செலுத்துவதற்கு ஏதுவாக வில் போல் வளைந்த

News image
Updated On :2 ஜனவரி 2024, 11:10 pm IST

* ஊதாப்பிட்டு தேன்சிட்டு

 இது சிட்டுக்குருவியை விட சிறியது. மலர்களில் உள்ள தேனைக் குடித்து வாழும் பறவை. இது தேனைக் குடிக்கும் அழகே தனி. இதன் அலகு பூக்களுக்குள் செலுத்துவதற்கு ஏதுவாக வில் போல் வளைந்திருக்கும். அலகிலிருந்து மிக மெல்லிய உறிஞ்சி குழல் போல் பூக்களுக்குள் செலுத்தி பூக்களில் உள்ள தேனைக் குடிக்கும். பூவின் அருகில் தனது சின்னஞ்சிறு சிறகை வேகமாக அடித்துக்கொண்டே பூவிலிருந்து தேனை நொடிப்பொழுதில் உறிஞ்சிவிடும். கருநீலத்தில் தலைப்பகுதியில் மயில் வண்ணத்தில் மின்னும் கழுத்திலிருந்து அடிப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக காணப்படும். இதன் ஒலி நம்பமுடியாத அளவிற்கு சத்தமாகவும் இனிமையாகவும் இருக்கும்.

 இது கூடு அமைக்கும் விதம் அலாதியானது. காய்ந்த இலை, வேர்கள் சிலந்தியின் வலைத் துண்டுகள் என பல்வேறு பொருள்களை சேகரித்து அதன் அளவுக்கேற்றாற் போல் இரண்டு இலைகளை இணைத்து கட்டும். பெண்களும் அறிவாற்றல் பெற்றவர்கள் என்பதற்கு இந்த பறவையை உதராணமாகக் கூறலாம். இதன் கூட்டை பெண் பறவை கட்டுவதுதான் அதற்குக் காரணம்.

சின்னான் குருவி

 இது கொண்டைக் குருவி, கொண்டலாத்தி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. தலைப்பகுதி கருப்பு

 நிறத்திலும் உடல் பகுதி பழுப்பு நிறத்திலும் சிறகுகளின் ஓரங்களில் வெள்ளை நிறமும் வாலின் அடிப்பகுதியில் சிவப்பு நிறமும் காணப்படும். இந்தியா முழுவதிலும் காணப்படும் பறவை இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.