தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முத்துக் கதை: மௌன மொழி

ஓரு அரசனின் அவையில், அறிவுக் கூர்மையும் சாதுர்யமும் மிகுந்த அமைச்சர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் புகழ்வது கண்டு, மன்னன் எரிச்சலடைந்தான். அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று முடிவு செய்தான

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:40 am

செவல்குளம் ஆச்சா

ஓரு அரசனின் அவையில், அறிவுக் கூர்மையும் சாதுர்யமும் மிகுந்த அமைச்சர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் புகழ்வது கண்டு, மன்னன் எரிச்சலடைந்தான். அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று முடிவு செய்தான்.

ஒருநாள் அவையில், மன்னன் புத்திசாலியான அந்த அமைச்சரைப் பார்த்து, "முட்டாள்களிடம் பழக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டான். அதற்கு அந்த அமைச்சர் எவ்வித பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார்.

அவர் பதில் தெரியாமல் இருக்கிறார் போலும் என்று நினைத்த மன்னன், "என்ன அமைச்சரே! நான் கேட்ட கேள்வி உமது செவிகளில் விழவில்லையா? முட்டாள்களுடன் பழக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?' என்று மீண்டும் கேட்டான்.

அதற்கும் பதில் கூறாமல் அமைச்சர் அமைதியாக இருந்தார்.

இதனால் கோபமடைந்த மன்னன், "என்ன, நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். எதுவும் கூறாமல் விழிக்கிறீரே! உமது காதுகள் செவிடா? அல்லது என் கேள்விக்குப் பதில் தெரியவில்லையா?' என்று கேட்டான்.

அமைச்சர், மன்னனுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, "மன்னர் பெருமானே! உங்கள் கேள்விக்கு உடனே பதிலளித்து விட்டேனே! நீங்கள்தான் அதைப் புரிந்து கொள்ளவில்லை!' என்றார்.

உடனே மன்னன், "மூன்று முறை நான் கேட்டும் பதிலேதும் கூறாமல் மெளனமாக அல்லவா இருந்தீர்..!' என்றான்.

அதற்கு அமைச்சர், "ஆம், அரசே! அதுதான் என் பதில். முட்டாள்களுடன் பழக வேண்டுமென்றால் மெளனம்தான் சாதிக்க வேண்டும்!'

என்றார்.

மன்னன் வாயடைத்துப் போனான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.