பறவையைத் தொடர்வோம்
சூரிய உதயத்திற்கு முன் எழுந்து தன் இனிமையான குரலால் ஒலியெழுப்பி சூழலை ரம்யமாக்கக்கூடியவை பறவைகள். இவை மனிதர்களின் வாழ்விற்கு உதவும் பல விஷயங்களைக் கற்றுத் தருகின்றன. மாறிவரும் கலாசாரம், இரவு வேலை என


சூரிய உதயத்திற்கு முன் எழுந்து தன் இனிமையான குரலால் ஒலியெழுப்பி சூழலை ரம்யமாக்கக்கூடியவை பறவைகள். இவை மனிதர்களின் வாழ்விற்கு உதவும் பல விஷயங்களைக் கற்றுத் தருகின்றன. மாறிவரும் கலாசாரம், இரவு வேலை என பல காரணங்களால் நம்மில் பலர் சூரிய உதயத்தையே பார்ப்பதில்லை. காக்கை, குருவி போன்ற பொதுப் பெயர்களைத் தவிர பறவைகளின் வேறு எந்தப் பெயரும் நம்மில் பலருக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு பறவைக்கும் அதன் தன்மைக்கேற்ப ஒரு தனிப்பெயர் உண்டு. அதைத் தெரிந்து கொள்வதற்காக உங்கள் வீட்டைச் சுற்றி உள்ள பறவைகளின் பின்னால் சற்றுப் பறந்து வாருங்கள்.
கரிச்சான் குருவி: இப்பறவைக்கு இன்னும் சில பெயர்களும் உண்டு இரட்டை வால் குருவி, மாட்டுக்காரன், கருங்குருவி என ஒவ்வொரு ஊரில் ஒரு பெயர் வைத்து அழைப்பார்கள். ஆங்கிலத்தில் பிளாக் டிரோங்கோ, கிங் க்ரோ என்றழைப்பார்கள்.
கரிச்சான் குருவி உருவத்தில் புறாவை விட சற்று சிறியது. பளபளப்பான கருப்பு நிறம், நீளமான வால் அவை இரண்டாகப் பிரிந்து இருக்கும். சிறிய அலகு உடையது. அலகு தொடங்கும் இடத்தில் மீசை போல் கருப்பு நிறத்திலேயே ரோமங்கள் காணப்படும். இவை இரை பிடிக்க மின் கம்பிகள், ஆடு, மாடு போன்றவற்றின் மேல் அமர்ந்தபடி இரையை நோட்டமிட்டுக்கொண்டு இரை கண்ணில் பட்டதும் சட்டென்று இறக்கையை விரித்துப் பறந்து இரையைப் பிடித்து மீண்டும் அதே இடத்தில் வந்து அமரும்.
மனிதர்கள் மிமிக்ரி செய்வது போல் கரிச்சான் குருவி அதன் குரலைத் தவிர வேறு சில பறவைகளைப் போல் குரலெழுப்பும் திறமை படைத்தது.
கரிச்சான் குருவி உருவத்தில் சிறியதாக இருந்தாலும் அதை விட உருவத்தில் பெரிய பறவைகள் காகம், பருந்து போன்றவற்றை ஓட ஓட விரட்டும் இன்னும் இந்த பறவையைப் பற்றி செல்லிக்கொண்டே போகலாம்.
இந்தப் பறவை நமக்குச் சொல்லும் பாடம் நெஞ்சில் உரமிருந்தால் நம்மைவிட பலசாலியானாலும் விழ்த்திவிட முடியும் என்பதே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...