அண்ணா
காஞ்சி புரத்தில் பிறந்திட்டார் கருத்தாய்க் கற்றுத் தேர்ந்திட்டார் தீஞ்சுவைத் தமிழில் தெளிந்திட்டார் சிறந்த அறிஞராய்த் திகழ்ந்திட்டார்! பேச்சால், எழுத்தால், நாடகத்தால் பெரியார் கொள்கை விதைத்திட்டார் மூ


காஞ்சி புரத்தில் பிறந்திட்டார்
கருத்தாய்க் கற்றுத் தேர்ந்திட்டார்
தீஞ்சுவைத் தமிழில் தெளிந்திட்டார்
சிறந்த அறிஞராய்த் திகழ்ந்திட்டார்!
பேச்சால், எழுத்தால், நாடகத்தால்
பெரியார் கொள்கை விதைத்திட்டார்
மூச்சால், செயலால் எந்நாளும்
மொழியை, நாட்டை நேசித்தார்!
அண்ணன், தம்பி உறவினையே
அரசியல் களத்தில் பதித்திட்டார்
எண்ணம், செயல்கள் எல்லாமே
எளியோர் உயரச் செலவிட்டார்!
கடமை, கண்ணியம் இவற்றோடு
கட்டுப் பாட்டினைக் கற்பித்தார்
மடமை அகலப் பகுத்தறிவை
மாற்றார் மதிக்க உரைத்திட்டார்!
பார்க்கச் சிறிய உருவத்தார்
பரந்து, விரிந்த உள்ளத்தார்
யார்க்கும் இனியர். எளியவராய்
ஏழையின் சிரிப்பில் மகிழ்ந்திட்டார்!
முதல்வர் பொறுப்பில் சிலஆண்டு
முடித்த பணிகள் ஏராளம்
எதையும் தாங்கும் இதயத்தை
என்றும் தமிழகம் நினைத்திருக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...