மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

touch ஸ்க்ரீன்

சில மேகங்கள் கருத்தும் சில வெள்ளையாகவும் காணப்படுகிறதே, ஏன் தெரியுமா?

News image
Updated On :5 ஏப்ரல் 2013, 4:14 am

டி.எஸ்.​ஆர். வெங்​கட்​ர​ம​ணா​​

மின்சாரக் கண்ணா

தேனீக்கள் பறக்கும்போது அல்லது தங்களின் சிறகுகளை அசைக்கும்போது உருவாகும் மின்சக்தி மூலமாக தேனீக்கள் தமக்குள் பேசிக் கொள்கின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அவை தங்களுடைய உடல் உறுப்புகளை ஒன்றுடன் மற்றொன்றை உரசும்போதும் மின்புலம் (உப்ங்ஸ்ரீற்ழ்ண்ஸ்ரீ ஊண்ங்ப்க்) உருவாகிறது. இந்த மின்புலம் மூலமாகக்கூட தேனீக்கள் தமக்குள் உரையாடுகின்றன.
தேனீக்கள் போன்ற சிறு பூச்சிகள் பறக்கும்போது மின்னூட்டம் (உப்ங்ஸ்ரீற்ழ்ண்ஸ்ரீ இட்ஹழ்ஞ்ங்) ஒன்று ஏற்படுகிறது என்பதை விஞ்ஞானிகள் முன்பே அறிந்திருந்தார்கள். ஆனால் இவ்வாறு எழுப்பப்படும் மின்புலத்தை அந்த தேனீக்கள் எப்படி பயன்படுத்துகின்றன என்பதை அண்மையில்தான் தெரிந்துகொண்டார்கள். பூச்சிகளின் உடல் மீது இருக்கும் மெழுகுபோன்ற வழுவழுப்பான பரப்பு மின்சக்தியை வெளியே கடத்தாமல் வைத்திருக்கிறது என்று கண்டார்கள். ஒரு மலரில் ஒரு தேனீ விருந்துண்டுவிட்டுப் போயிருக்கிறது என்பதை அந்த மலரைச் சுற்றி புதிதாக ஏற்பட்டுள்ள மின்புலம் மூலம் மற்றொரு தேனீ அறிந்துகொள்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இந்த மின்புலத்தை தேனீக்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளப் பயன்படுத்த முடிகிறது. அவை தமக்குள் என்னதான் பேசிக்கொள்கின்றன? அடுத்ததாக விஞ்ஞானிகள் அதையும் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நம்பலாம்.

தங்க வேட்டை

தங்கம் எப்போதுமே பெரும் மதிப்புள்ள பொருளாக இருந்துள்ளது. பத்து வருஷங்களுக்கு முன்பு இருந்த விலையை விட இன்று அதன் விலை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இயற்கையிலிருந்து தங்கத்தை எடுக்கும் செலவும் நான்கு மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது.
வெறும் அலங்காரமாகக் கழுத்திலும் காதிலும் தொங்கிக் கொண்டிருப்பதோடு மருத்துவ தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் அதற்கு உபயோகம் உண்டு. சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் தங்கம் தவிர புதிய இடங்களிலும் விஞ்ஞானிகள் அதைத் தேடி வருகிறார்கள்.
பூமிக்கு அடியில் தேடுவது மட்டுமல்லாமல், கடலுக்கு அடியிலும் மலைச் சிகரங்களிலும் தங்கத் துகள்களை சுரண்டியெடுக்க ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.
நாம் உபயோகம் தீர்ந்ததென்று தூக்கி எறியும் எலக்ட்ரானிக் சாதனங்களில் உள்ள தங்கத்தைச் சுரண்டி, தங்கம் எடுப்பது ஒரு முறை. நாளுக்கு நாள் மலை மலையாகக் குவிந்துவரும் எலக்ட்ரானிக் குப்பை தங்கம் கிடைக்கும் ஒரு முக்கிய இடமாகிவிட்டது. மொபைல் போன், கம்ப்யூட்டர் போன்ற ஒவ்வொரு எலக்ட்ரானிக் சாதனத்திலும் பயன்படுத்தப்பட்ட மிகச் சிறிய அளவு தங்கத்தை எடுத்தாலே கணிசமான அளவு கிடைக்கிறது.
தங்க வேட்டையில் இப்போது தீவிரமாக நடப்பது - நுண்ணுயிரிலிருந்து தங்கம் எடுப்பதுதான். இதில் சில விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். சாதாரண உயிரினங்கள் இருக்கவே முடியாத சுரங்கங்கள் போன்ற கடுமையான சூழலில் வாழும் நுண்ணுயிரிகளுக்கும் தங்கம் உருவாவதற்கும் தொடர்பு இருக்கிறதா? என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.
சில வகை நுண்ணுயிர்களைத் தங்க குளோரைடில் சேர்த்தால் அவற்றின் உடலிலிருந்து நானோ துகள் அளவு தங்கம் வெளியேறுகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கடல் நீரில் உள்ள தங்கக் குளோரைடிலிருந்து தங்கம் எடுக்கும் முறைகளை இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். தங்கத்தை வெளியேற்றும் நுண்ணுயிர்களைத் தேடும் பணி படுதீவிரமாக நடக்கிறது. இதற்காகக் கடலுக்கு அடியில் வாழும் நுண்ணுயிர்களைப் பற்றிய ஆராய்ச்சி நடக்கிறது. தங்கத்தை வெளியேற்றும் திறனுள்ள பதினைந்து வகை நுண்ணுயிர்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
 

மேகங்கள்

சில மேகங்கள் கருத்தும் சில வெள்ளையாகவும் காணப்படுகிறதே, ஏன் தெரியுமா?
வெள்ளை மேகங்களைப் பற்றி ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீர் நிலைகளிலிருந்து நீராவி ஆகாயத்தில் உயர்ந்து மேகங்கள் உருவாகின்றன. மேகங்களில் உள்ள நீர்த்துகள்களில் சூரிய வெளிச்சம் பட்டு மேகம் வெள்ளையாக நமக்குத் தோற்றம் அளிக்கிறது.
இனி, கருமேகங்களைக் குறித்துப் பார்க்கலாம். கருத்து அடர்த்தியாகக் காணப்படும் மேகம் என்பது பல மேகங்களின் அடுக்கு. கருத்த மேகங்களுக்குப் பின்னால் (அல்லது நம் கண்ணுக்குத் தெரியும் விதத்தில் கருத்த மேகங்களுக்கு மேலே என்று கூறலாம்), பல கிலோமீட்டர் அளவுக்கு மேகங்கள் இருக்கக்கூடும். அத்தனை பருமனான மேகக்கூட்டத்தின் இடையே சூரிய ஒளி புகுந்து வர சாத்தியமில்லை என்பதால் மேகம் கருப்பாகத் தோற்றம் அளிக்கிறது. அதாவது பூமியிலிருந்து காணும்போது கருப்பாகத் தோன்றுகிறது. ஆனால் நீங்கள் ஒரு விமானத்தில் அமர்ந்து விண்ணில் பறந்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். மேகங்களுக்கு இடையில் நீங்கள் பறக்கும்போது அவை வெள்ளை நிறம் கொண்டதாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம். சுருக்கமாகச் சொன்னால், பருமன் குறைந்த மேகம் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. பருமன் கூடிய மேக அடுக்கு கருப்பாகத் தோற்றம் அளிக்கிறது.
- டி.எஸ்.ஆர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.