டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குத்தாத முட்கள்

காலில் குத்தி இரணமாய்ப் பலமுள்கண்ணீர் முட்டும் வலியூட்டும்-எனும்மூலக் கருத்தின் முரணாய்ச் சிலமுள்

News image
Updated On :22 பிப்ரவரி 2013, 10:08 am

தளவை இளங்குமரன்

காலில் குத்தி இரணமாய்ப் பலமுள்

கண்ணீர் முட்டும் வலியூட்டும்-எனும்

மூலக் கருத்தின் முரணாய்ச் சிலமுள்

முன்னேற் றத்தின் வழிகாட்டும்!

வேகம் காட்டும் கருவியின் சிறுமுள்

விபத்து வருமுன் நினைவூட்டும்-தினம்

மேகம் தாண்டும் ஊர்தியின் திசையை

மின்காந்தப் பொறிமுள் முனைகாட்டும்!

தாழும் உயரும் தட்டை ஒருமுள்

தடுத்துத் தராசின் சமன்காட்டும்-அணி

சூழும் இசையின் தட்டில் விழும்முள்

சுவைக்கும் செவிக்கு அமுதூட்டும்!

காலம் முழுக்கச் சுழலும் இருமுள்

கடிகா ரத்தில் மணிகாட்டும்-நனி

ஞாலம் வெளுக்கப் "பேனா' முட்கள்

நலமாய் எழுத்துப் பணியாற்றும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.