தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருக்குறள்

 திருக்குறள்' நீதி நூலாகும் - அது தெய்வத்தின் குரலைப் போலாகும்!

News image
Updated On :26 ஜூலை 2013, 3:35 am

அ.கருப்பையா

 திருக்குறள்' நீதி நூலாகும் - அது
 தெய்வத்தின் குரலைப் போலாகும்!
 
 அறம், பொருள், இன்பம் பகுப்பாகும் - இந்த
 மானுட வாழ்க்கையின் தொகுப்பாகும்!
 
 பதின்மர் அதற்கு உரைகண்டார் - அதைப்
 படித்தோர் கருத்தின் கரைகண்டார்!
 
 நாடு, மொழி, இனம் இதற்கில்லை - நல்ல
 அன்பும் ஒழுக்கமும் அதற்கெல்லை!
 
 எத்தனை மொழியில் மொழிபெயர்ப்பு - அவை
 அத்தனையும் தமிழின் பெருஞ்சிறப்பு!
 
 கற்று நடப்பவர் சிறந்தோராம் - பாரில்
 கல்லார் தம்மை மறந்தோராம்!
 
 "உலகப் பொதுமறை' அதன்பேராம் - புவி
 உவந்து அளித்த நற்சீராம்!
 
 தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்
 பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்!

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.