தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மாற்றுத் திறனாளிகள்... மகத்தான சாதனைகள்!

ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் 2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தென் ஆப்ரிக்கா சார்பில் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு 200 மீட்டர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர் டெரன்ஸ் பார்கின்.

News image
Updated On :7 ஜூன் 2013, 5:15 am

செவல்குளம் ஆச்சா

நீச்சல் வீரர் டெரன்ஸ் பார்கின்
 

ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் 2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தென் ஆப்ரிக்கா சார்பில் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு 200 மீட்டர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர் டெரன்ஸ் பார்கின். போட்டியில் வெற்றி பெறுவதும் பதக்கங்கள் பெறுவதும் சாதாரண நிகழ்வுகள்தான். ஆனால் டெரன்ஸ் பார்கினைப் பொறுத்தவரை என்ன ஆச்சரியம் தெரியுமா? இவருக்குக் காது கேட்காது.
 காது கேட்காத ஒரு விளையாட்டு வீரர் எப்படி ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்? இதுதான் இவருடைய தனிச் சிறப்பு!
 டெரன்ஸ் பார்கின் ஆப்ரிக்காவில் மூன்று நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்தவர்.
 ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற "ஷார்ட் கோர்ஸ் வேர்ல்ட் சாம்பியன்ஷிப்' போட்டியில் கந்து கொண்டு இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
 தன்னுடைய குறைபாடு, தன்னுடைய திறமையை உலகுக்கு எடுத்துக்காட்டத் தடையாக இருக்கக்கூடாது என்ற லட்சியத்துடன் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற்று வருபவர் இவர்.
 தான் எந்த விதத்திலும் சாதாரணமாகக் காது கேட்கும் தன்மையுள்ள இதர விளையாட்டு வீரர்களுக்குத் தாழ்ந்தவன் இல்லை, அவர்களுக்குச் சமமானவன்தான் என்னும் கருத்தை உடையவர்.
 ஒவ்வொரு போட்டியின் போதும், தான் இதற்குமுன் நடந்த போட்டியில்
 செய்ததை
 விடச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற மன உறுதி படைத்தவர் டெரன்ஸ் பார்கின். இந்த மன உறுதியும் விடாமுயற்சியும்தான் இவர் பல போட்டிகளில் வெற்றி பெற்று பல பரிசுகளை வெல்லக் காரணமாக இருந்தன.
 1980-ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவில் பிறந்த இவர் தன்னுடைய 14-வது வயதில்தான் நீச்சல் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார்.
 தனது வாழ்வும் எதிர்காலமும் நீச்சல் போட்டியில்தான் என்ற உறுதியுடன் கடுமையாக நீண்ட நேரப் பயிற்சிகளை மேற்கொண்டார்.
 இவரது முயற்சி வீண்போகவில்லை. வெற்றிகள் அவரை வந்து சேர்ந்து மேலும் உற்சாகப்படுத்தின. நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ளும்போது, போட்டி ஆரம்பிக்க ஒலிக்கும் அடையாள சப்தத்தைத் தன் உடம்பில் பொருத்தியிருக்கும் ஒரு மின்னணு கருவி மூலமாக, கேமராவில் ஃப்ளாஷ் லைட் ஒளி வருவது போல தனது கண்
 களுக்குள் ஏற்படச் செய்து அதன் மூலம் போட்டியின் ஆரம்ப நேரத்தை உணர்ந்து, நீச்சல் குளத்துக்குள் பாயத் தொடங்குவார். அப்புறம் என்ன? இடைவிடாத வேகம்தான்...
 மன உறுதியும் நம்பிக்கையும் இருந்தால் எந்தக் குறைபாட்டையும் மாற்றியமைத்து வாழ்வில் சாதனைகள் படைக்கலாம் என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு டெரன்ஸ் பார்கின்.
 -அடுத்த இதழில்:
 அமெரிக்க அதிபர்
 ரூஸ்வெல்ட்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.