

தீமைகள் அகன்ற ஒருநாளாம் - அது
"தீபா வளி'யெனும் திருநாளாம்!
எண்ணெய் தேய்த்துக் குளித்திடுவார் - அன்று
யாவரும் சேர்ந்தே களித்திடுவார்!
ஆடைகள் புதிதாய் அணிந்திடுவார் - கூடி
அவரவர் தெய்வத்தைப் பணிந்திடுவார்!
சுவையாய் உணவுகள் உண்டிடுவார் - தங்கள்
சுற்றம் நட்பையும் கண்டிடுவார்!
செய்திகள் அனுப்பி வாழ்த்திடுவார் - நல்ல
செயலால் மகிழ்ச்சியில் ஆழ்த்திடுவார்!
வீடுகள், தெருக்களில் வெடியோசை - எங்கும்
பெரியவர், சிறியவர் கரஓசை!
ஒற்றுமை, அன்பை முன்னோர்கள் - இன்று
கற்றுக் கொள்ளவே சொன்னார்கள்!
உணவும், உடையும், இருப்பிடமும் - இதுபோல்
தினமும் கிடைத்திட வழிகாண்போம்!
இருளை வாழ்வில் விரட்டிடுவோம் -நல்ல
பொருளை உழைத்தே திரட்டிடுவோம்!
வருடம் தோறும் வரவேண்டும் - இந்நாள்
வாழ்வில் நலங்கள் தரவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்
மேற்காசிய நிலவரம்: பிரான்ஸ் அதிபா், ஓமன் சுல்தானுடன் பிரதமா் ஆலோசனை

முதியோா் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு விண்ணப்பம் அளிப்பு

என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகளுடன் மத்திய அமைச்சா் பேச்சு: இன்று முடிவு தெரிவிப்பதாக தகவல்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

