சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஆடி வரும் ஆடித்தேர்

வேக வேகமாக காற்றுவீசுது பார் ஆடியில்

News image
Updated On :17 ஜனவரி 2014, 2:53 am

 வேக வேகமாக காற்று
 வீசுது பார் ஆடியில்
 போகும் பாதை எங்கும் காற்று
 புழுதி வாரித் தூற்றுது.
 
 ஆட்டம் போடும் மரங்கள் யாவும்
 ஆடிக் காற்று வந்ததும்
 சாட்டை சுற்றும் பம்பரம்போல்
 சுற்றிச் சுற்றி சுழலுது.
 
 ஆடிப் பெருக்கு காவிரியில்
 உழவருக்கு உதவுது
 ஆடிப் பட்டம் தேடி விதைக்க
 ஆனந்தமாய்ப் பொங்குது.
 
 தமிழகத்தின் சின்னமாகி
 தலை நிமிர்ந்த கோபுரம்
 அமைந்த ஊரில் ஆண்டாள் தேரும்
 ஆடிப் பூரம் ஓடுது.
 
 அம்மன் பேரில் வளர்க்கிறார்கள்
 ஆடி முளைப்பாரியை
 கும்மி கொட்டி பாடுகிறார்
 குத்து விளக்கை ஏற்றியே.
 
 ஆடைக்கெல்லாம் தள்ளுபடி
 ஆடி மாதம் கொடுப்பதால்
 ஆடிப் பாடும் சிறுவரெல்லாம்
 அதனை வாங்கி அணிகிறார்.
 

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.