மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு வாரத்தின் முதல் நாள்! பங்குச் சந்தைகள் சரிவு தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்? சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
/

விழித்தெழு!

மழைக்கு ஏங்கிக் கிடக்காதே - நீமரத்தை நட்டால்

News image
Updated On :14 மார்ச் 2014, 10:10 am IST

 மழைக்கு ஏங்கிக் கிடக்காதே - நீ
 மரத்தை நட்டால்
 அது போதும்!
 
 மலையைக் கண்டு திகைக்காதே - சிறு
 உளியை எடுத்திடு
 அது போதும்!
 
 மடமை கண்டு மலைக்காதே - உன்
 கடமை செய்திடு
 அது போதும்!
 
 முள்ளைப் பகையாய் நினைக்காதே - அது
 வேலி ஆனால்
 அது போதும்!
 
 கல்லைக் கண்டு கலங்காதே - அதை
 சிலையாய் வடித்திடு
 அது போதும்!
 
 சொல்லைப் பேசிக் கிடக்காதே - நீ
 செயலாய் மாற்றிடு
 அது போதும்!
 
 நெருப்பைக் கண்டு நெகிழாதே -அதில்
 சோறு சமைத்திடு
 அது போதும்!
 
 காரிருள் கண்டு மிரளாதே - செங்
 கதிராய் எழுந்திடு
 அது போதும்!
 
 எதனைக் கண்டும் ஏங்காதே - விழித்
 தெழுந்து செயல்படு
 அது போதும்!
 

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.