டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இயற்கை அன்னை

காலையிலே ஒளிப்பிழம்புக்கதிரவனாய் விழிப்பாள்!

News image
Updated On :28 மார்ச் 2014, 2:40 am

தளவை இளங்குமரன்

 காலையிலே ஒளிப்பிழம்புக்
 கதிரவனாய் விழிப்பாள்!
 கடலலையில் குளித்தெழுந்து
 காரிருளை ஒழிப்பாள்!
 
 சேலையென வயல்வழங்கும்
 செழும்பசுமை உடுப்பாள்!
 செங்கமல முகமலர்ந்து
 சிறுமுறுவல் தொடுப்பாள்!
 
 சோலைவன வசந்தமலர்
 சூடிக்குழல் முடிப்பாள்!
 சுகமளிக்கும் நிழற் குடையைச்
 சுடும்வெயிலில் பிடிப்பாள்!
 
 மாலையிலே மனங்குளிரும்
 மாருதமாய் நடப்பாள்!
 மயங்கும்அந்தி நில விரவாய்
 மாறிநமைக் கடப்பாள்!
 
 ஆலைபெறும் கனிமங்களை
 அருங்கொடையாய் அளிப்பாள்!
 அய்ந்துபூத கணங்களிலும்
 அவளிருந்து களிப்பாள்!
 
 பாலைவன உயிர்களுக்கும்
 பசிக்குணவு படைப்பாள்!
 பாசமுடன் உலகனைத்தும்
 படுக்கமடி கொடுப்பாள்!
 

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.