டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆசிரியர்

அன்னை தந்தை இருவரைஅடுத்து நெஞ்சில் நிறைபவர்!

News image
Updated On :28 ஆகஸ்ட் 2015, 2:53 pm

தளவை இளங்குமரன்

அன்னை தந்தை இருவரை

அடுத்து நெஞ்சில் நிறைபவர்!

அண்டிக் கற்க வருபவர்

அகத்தில் ஒன்றி உறைபவர்!

மண்ணில் மடமை இருளினை

மாற்றும் கடமை புரிபவர்!

கண்ணைத் திறந்து அறிவொளி

காட்டும் கருணைக் குரியவர்!

எண்ணை எழுத்தை பொறுமையாய்

எவர்க்கும் கற்றுத் தருபவர்!

என்ப தனால் இறைவனாய்

ஏற்றுப் போற்றப் பெறுபவர்!

பண்பை பணிவை பரிவுடன்

பலர்க்கும் புகட்டும் புரவலர்!

உண்மை ஒழுக்கம் பெருகிட

உழைத்து உழைத்துக் கரைபவர்!

சின்னச் சின்னப் பறவைகள்

சிகரம் தாண்டிப் பறந்திட

தன்னம் பிக்கைச் சிறகுகள்

தந்து வானாய் விரிபவர்!

தொண்டில் கல்விக் கரைதொட

தோணி யாகும் திருமகர்!

எண்ணும் வெற்றிப் பிறைதொட

ஏணி யாகும் பெருமகர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.