புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முத்துக் கதை: ஒரு தாயின் தவம்

ஒருநாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தம் அம்மாவிடமே கொடுக்க வேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாகச் சொல்லிக் கொடுத்தான்.

News image
Updated On :5 டிசம்பர் 2015, 11:51 am

சா. பன்னீர் செல்வம்

ஒருநாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தம் அம்மாவிடமே கொடுக்க வேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாகச் சொல்லிக் கொடுத்தான்.

 அந்தக் கடிதத்தை முழுவதும் தனக்குள்ளே படித்துவிட்டு, அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும்படி இப்படிப் படித்தாள்.

 ""உங்கள் மகனின் அறிவுத் திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது. அவனுக்குக் கற்பிக்கத் திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை. அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்குக் கற்பிப்பது நல்லது'' என்று.

 அதன்பிறகு தானே தன் மகனுக்கு தனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்லிக்கொடுத்து பிறகு பழைய புத்தகங்கள் விற்கும் கடையிலிருந்து நிறைய புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அவரையே படிக்கவும் வைத்தார்.

 பல ஆண்டுகளுக்குப் பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார். எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராகவும், கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்.

 இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பு ஒருமுறை பள்ளியிலிருந்து கொண்டு வந்து கொடுத்த கடிதம் எதேச்சையாகக் கண்ணில்பட அதை எடுத்துப் படித்துப் பார்த்தார்.

 அதில் இப்படி எழுதி இருந்தது.

 ""மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம். உங்கள் பிள்ளையால் எங்கள் பள்ளிக்கே கெடுதல் ஏற்படும்'' என்று.

 இதைப் படித்த எடிசன் கதறி அழுதார். பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

 ""மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளன் ஆனான்'' என்று.

 தன் பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்குக் கொண்டு செல்லும். நம்மால் பல எடிசன்களை உருவாக்க முடியும்.

 குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்.

"மேதைகள் வாழ்வினில்' நூலிலிருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.