டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சூரிய காந்தி!

வீரிய எண்ணெய் வித்துக்களின் விவரக் குறிப்புப் பட்டியலில்ஓரிடம் சூரிய காந்திக்கும்உள்ளதை நாமும் கண்டிடலாம்!

News image
Updated On :15 மே 2015, 10:20 am

தளவை இளங்குமரன்

வீரிய எண்ணெய் வித்துக்களின்

விவரக் குறிப்புப் பட்டியலில்

ஓரிடம் சூரிய காந்திக்கும்

உள்ளதை நாமும் கண்டிடலாம்!

ஏரியின் குளத்தின் நீர்பாய்ச்ச

இயலாப் புஞ்சை நிலத்தினிலும்

ஏரினை ஓட்டி விதை போட்டு

எளிதாய்ப் பயிறும் செய்திடலாம்!

பேரிடர் விளைக்கும் கொழுப்புதனைப்

பெரிதும் விலக்கித் தயாரித்த

சூரிய காந்தி எண்ணெயினால்

சுவையாய்ச் சமைத்து உண்டிடலாம்!

நீரினில் பூக்கும் தாமரைபோல்

நிலத்தினில் பூக்கும் பூயிதுவும்

காரிருள் போக்க எழும் கதிராய்க்

கவனத்தை ஈர்க்கும் செண்டெனலாம்!

சூரியன் போகும் திசையினிலே

சுடர்முகம் காட்டித் திரும்புவதே

சூரிய காந்தி எனும் பெயரைச்

சூடிடக் காரணம் என்றிடலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.