இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

சொர்க்கம் நரகம்

ஒரு கிராமத்திற்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். கிராம மக்கள் அவரிடம் மதிப்பும் அன்பும் வைத்திருந்தனர். அவரிடம் ஒரு மனிதன் சுயநலத்திற்கும் பொதுநலத்திற்கும் உள்ள வித்தியாசம்

News image
Updated On :14 நவம்பர் 2015, 9:37 am

ஒரு கிராமத்திற்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். கிராம மக்கள் அவரிடம் மதிப்பும் அன்பும் வைத்திருந்தனர். அவரிடம் ஒரு மனிதன் சுயநலத்திற்கும் பொதுநலத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?  என்று கேட்டான்.

கிராமவாசிகளிடம் பெரியவர் ஓர் அண்டாவில் உணவு கொண்டு வரச் சொன்னார்.

அவர் மீது மதிப்பு வைத்திருந்த கிராம வாசிகள் உடனே ஓர் அண்டாவில் சுவை மிகுந்த உணவுடன் வந்தனர். எல்லோரிடமும் ஒரு கரண்டியையும் கொடுக்கும்படி சொன்னார் பெரியவர்! எல்லோரையும் கரண்டியால் உணவை அள்ளச் சொன்னார் பெரியவர்! எல்லோரும் அதன்படிச் செய்தார்கள்! ""இப்போது கையை உணவுடன் கூடிய கரண்டியுடன் நீட்டிக் கொள்ளுங்கள்'' என்றார்.

 அனைவரும் அதன்படியே செய்தனர்.

 ""இப்போது கையை மடக்காமல் உணவை அருந்துங்கள் பார்க்கலாம்''என்றாரே பார்க்கலாம் பெரியவர்!

 இதை எப்படிச் செய்வது என்று எல்லோரும் விழித்தனர்! யாருமே உணவை அருந்த முடியவில்லை! தவித்தனர்!

 ""சரி! இப்போது நீட்டிய கைகளில் இருக்கும் உணவுடன் கூடிய கரண்டியால் மற்றவருக்கு ஊட்டிவிடுங்களேன்'' 

 எதிரும் புதிருமாக நின்று கொண்டு ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக்கொண்டனர்! ஒருவன்  மொண்டு மற்றவனுக்கு ஊட்டுவான். மற்றவன் மொண்டு ஒருவனுக்கு ஊட்டுவான். எல்லோரும் வயிறு நிறையச் சாப்பிட்டார்கள்.

 ""இதுதான் சுயநலத்திற்கும், பொதுநலத்திற்கும் உள்ள வித்தியாசம்...,நீங்கள் உங்களது பசியையும் ருசியையும் பற்றியே முதலில் நினைத்தீர்கள்...,தவித்தீர்கள்! நீங்களும் பசியாறவில்லை! மற்றவர்களுக்கும் ஒன்றும் கிடைக்கவில்லை! பிறகு உங்களைத் தவிர்த்து பிறருடைய வயிற்றை நிரப்ப முற்பட்டீர்கள்! பாருங்கள்! நீங்களும் பசி ஆறினீர்கள்!

மற்றவர்களும் பசியாறினார்கள்!

""இதுதான் சுயநலத்திற்கும் பொதுநலத்திற்கும் உள்ள வித்தியாசம்'' என்றார் பெரியவர்!

அன்று முதல் கிராமத்தினர் ஒற்றுமையாகவும, சேவை மனப்பான்மையுடன் இனிதே வாழ்ந்தனர்! பொதுநலம் இயற்கையாகவே ஒரு நல்ல விளைவை ஏற்படுத்துகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.