டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கதைப்பாடல்: வெற்றிக் கூட்டணி

இரண்டு நரிகள் கூடியேஇரையைத் தேடிச் சென்றன!

News image
Updated On :26 செப்டம்பர் 2015, 10:07 am

தளவை இளங்குமரன்

இரண்டு நரிகள் கூடியே

இரையைத் தேடிச் சென்றன!

திரண்டு கொடியில் ஆடிடும்

திராட்சைக் குலைகள் கண்டன!

எட்டிப் பறித்து உண்ணவே

இரண்டும் தமக்குள் எண்ணின!

திட்டம் கவிழ்த்துக் கொண்டதால்

சேர்ந்து முயற்சி பண்ணின!

ஒன்றின் முதுகில் ஒன்றுமே

உந்தி ஏறி நின்றுமே

அன்று பறித்து நன்றுமே

ஆசை தீரத் தின்றன!

கூட்டு முயற்சி என்றுமே

கொடுக்கும் வெற்றி என்றுமே

பாட்டுக் கதையில் இன்றுமே

படித்துக் கொள்க என்றன!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.