சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

முத்துக் கதை: கொஞ்சம்  மரத்தின்  மேல் பார்!

ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். பகவான் ஸ்ரீ ரமணரைப் பற்றிக் கேள்விப்பட்டார்  ஒரு ஆங்கிலேய அதிகாரி. அவரை தரிசித்து தனது

News image
Updated On :3 டிசம்பர் 2016, 8:29 am

ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். பகவான் ஸ்ரீ ரமணரைப் பற்றிக் கேள்விப்பட்டார்  ஒரு ஆங்கிலேய அதிகாரி. அவரை தரிசித்து தனது ஆன்மீக சந்தேகங்களுக்கு விடைகாண விரும்பினார். அதற்காகத் தன் காரியதரிசியுடன் காரில் திருவண்ணா
மலைக்கு வந்தார்.  
 அதிகாரி வந்தபோது ரமணர் இருக்கையில் இல்லை. அவர் தரையில் அமர்வது வழக்கம். ஆங்கிலேய அதிகாரி அமர்வதற்கு காரியதரிசி காரிலேயே ஒரு நாற்காலியை எடுத்து வந்திருந்தார்.நாற்காலியை ரமணர் அமரும் இடத்திற்கு எதிரே போட்டார். ரமணரின் தீவிர பக்தர் இதைப் பார்த்தார். அவருக்குக் கோபம் ஏற்பட்டது.
 பக்தர் காரியதரிசியிடம், ""ஐயா, இந்த நாற்காலியை ஏன் இங்கு போட்டீர்கள்?'' என்று கேட்டார்.
""ஐயா, வந்திருப்பது மிக உயர்ந்த அந்தஸ்து உள்ள அதிகாரி...,அவர் தரையில் அமர மாட்டார். அவருக்காகத்தான் இது!''
""இதோ பாருங்கள்...., அவர் உங்களுக்கு வேண்டுமானால் பெரிய அதிகாரியாக இருக்கலாம்..., ஆனால் ஸ்ரீ ரமணர் முன்பு நாற்காலியில் அமர யாரையும் இங்கு அனுமதிக்க முடியாது...முதலில் இதை எடுத்துச் செல்லுங்கள்...'' என்று சத்தமிட்டார் பக்தர்!
 அப்போது அங்கு வந்த ரமணர் காரியதரிசியைப் பார்த்து, ""அப்பா, உனது அதிகாரிக்குத் தரையில் அமர்ந்து பழக்கமில்லையென்றால் நாற்காலியிலேயே உட்காரட்டும்...., பரவாயில்லை'' என்றார்.
 அதிகாரியும் நாற்காலியில் அமர்ந்தார். இருவரும் சிறிது நேரம் உரையாடினர். பக்தரின் மனம் மிகவும் வேதனையுற்றது. சிறிது நேரம் கழித்து அந்த அதிகாரி விடை பெற்றார்.
 வேதனையோடிருந்த பக்தரிடம், ""ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?'' என்று ரமண மகரிஷி கேட்டார். ரமணரிடம் தன் வேதனையைக் கூறினார் பக்தர். அவரை ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றார் ரமணர்.
 ""கொஞ்சம் மரத்தின் மேல் பார்''என்றார் ரமணர். பக்தரும் மேலே பார்க்க ஒரு குரங்கு மரத்தின் மேல் விளையாடிக்கொண்டிருந்தது. ""மேலே குரங்கு'' என்றார் பக்தர்.
 ""நாம் எங்கு இருக்கிறோம்''
 ""கீழே''
 ""உயரத்தில் இருப்பதால் குரங்குகள் பெருந்தன்மை உடையதும் இல்லை...., கீழே நிற்பதால்  நாம்  கீழானவர்களும் அல்ல''என்றார் ரமணர் சிரித்துக் கொண்டே!
 ரமணரின் பெருந்தன்மையை உணர்ந்து கொண்டார் பக்தர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.