சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கதைப்பாடல்: கடல்

நான்கு பக்கம் கடல்கள் சூழ்ந்த நாட்டைத் தீவென் பார்கள்.

News image
Updated On :26 ஜூன் 2016, 11:11 am

நான்கு பக்கம் கடல்கள் சூழ்ந்த

  நாட்டைத் தீவென் பார்கள்.

மூன்று பக்கம் சூழ்ந்த நாட்டின்

  பெயரோ தீப கற்பம்.

முத்து, பவளம் ஆழத் திலே

  மூழ்க மூழ்கக் கிடைக்கும்.

சொத்து மிக்க சுரங்க மாக

  கத்தும் கடல்கள் அமையும்.

பாய்ச்சு வார்கள் நீரைக் கரையில்

  பாத்தி கட்டி வைத்து

காய்ச்சு வார்கள் அதிலே உப்பு

 கடலும் உணவுக் குதவும்.

மின்னு கின்ற மீன்கள், மீனைத்

 தின்னும் திமிங்க லங்கள்

இன்னும் நிறைய ஜீவ ராசி

 இருக்கும் உலகம் கடலே.

திரவியங்கள் தேட வேண்டி

  திரைகடலில் சென்றால்

கரையின் திசையை அறிய வேண்டி

  சுழலும் விளக்கு எரியும்.

நன்கு திரியும் கரையின் ஓரம்

  மணலில் வீடு கட்டி

கண்டு மகிழும் சிறுவர் போல

  துள்ளிக் குதிக்கும் அலைகள்.

கடலின் மீதும் பாலம் கட்டி

  காரில் பயணம் போவோம்.

கடலும் வானும் நீல வண்ணம்

காணக் காண அழகு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.