"ரூத் கிரேவ்ஸ் வேக் ஃபீல்டு' என்ற பெண்மணி 1924 ஆம் ஆண்டில் பர்மிங்காம் மாநிலத்தில் உள்ள "இல்லக்கலைத்துறை' பள்ளியில் பட்டம் பெற்றவர். ரூத் கிரேவ் வேக்ஃபீல்டு ஒர் உணவுக்கலை நிபுணராகவும், அது தொடர்பான விரிவுரையாளராகவும், பணியாற்றினார். அவர் தன் கணவருடன் சேர்ந்து "டோல் ஹவுஸ் இன்' என்ற பெயரிலான ஒரு சுற்றுலா ஓட்டலை வாங்கினார். அந்த ஓட்டல் வேலைகளில் முழுமூச்சாக இறங்கிவிட்டார் ரூத்!
ஒட்டலுக்கு வரும் வாடிக்கையாளருக்கு விதவிதமாக உணவு தயாரித்து வழங்கத்தானே புதிய புதிய செய்முறைகளை அறிமுகப்படுத்தினார். ரூத்தின் அபிமான தயாரிப்புகளில் ஒன்றாக விளங்கியது "பட்டர் டிராப்!'
இந்தச் செய்முறை சாக்லெட் போன்ற இனிப்புப் பொருள் தயாரிக்க ரொம்பவும் பயன்பட்டது. இதைத் தொடர்ந்து ஒருநாள் ரூத் அந்த கலவையைப் பயன்படுத்தி சாக்லெட் போன்ற இனிப்பு உணவுப் பொருளை செய்து பார்த்தார்.
அவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி புதிய வடிவம் கொடுத்தார். பேக்கரிகளில் சாக்லெட் போன்று தயாரிக்கப்பட்டு வந்த பொருளைவிட ரூத் செய்த சாக்லெட் கலந்த குக்கீஸ் மிகப் பிரமாதமாக வந்திருந்தது! வாயில் மென்று சுவைக்க இதமாகவும் மென்மையாகவும் இருந்தது! அதுதான் சாக்லெட் குக்கீஸ்! அதிலிருந்து அந்தச் சாக்லெட் குக்கீஸ் அந்தப்பகுதிகளில் மிகவும் பிரபலமானது!
டோல் ஹவுஸ் ஓட்டலின் அந்தச் சாக்லெட் குக்கீஸ் செய்முறையை "நெஸ்ட்லே' நிறுவனத்தின் "ஆண்ட்ரூ' வாங்கினார்! இந்த சாக்லெட் குக்கீஸ் உலகெங்கும் பரவியது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தன்னை இயேசுவாக சித்தரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


