திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

கால்நடை மருத்துவ சாதனை!

சாலையில் ஒரு விபத்து! அதில் ஒரு நாய்க்கு தண்டுவடம் முறிந்து விட்டது! கால்நடை மருத்தவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

News image
Updated On :29 டிசம்பர் 2017, 6:30 pm

சாலையில் ஒரு விபத்து! அதில் ஒரு நாய்க்கு தண்டுவடம் முறிந்து விட்டது! கால்நடை மருத்தவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஸ்டெம் செல் தெரபி என்னும் குருத்தணு சிகிச்சை முறையின் மூலம் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டது! இப்போ நாய் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது! சென்னையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இந்தச் சாதனையை படைத்துள்ளது!
அதென்ன ஸ்டெம் செல் சிகிச்சை முறை? எலும்பு மஜ்ஜையிலிருந்து செல்களை எடுத்து அதை அடிபட்ட தண்டுவடம் பகுதியில் செலுத்தினார்கள்! முப்பது நாட்களில் எலும்புகள் ஒன்றுகூடி அந்த நாயின் உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது. இதையடுத்து, அதே போன்று மீண்டும் ஒரு முறை ஸ்டெம் தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்குப் பின்னர் வியக்கத்தக்க வகையில் அந்த நாய் தனது முழு எடையையும் பின்னங்கால்களில் போட்டு எழுந்து நிற்க முடிந்தது. பின்னர் நடக்கவும் செய்தது! 

மற்றொரு விசேஷ செய்தி!

வீட்டிலே வளர்க்கிற நாய்க்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டு நிறைய ரத்தம் வீணாகிவிட்டதா? ரத்தம் ஏற்றினால் நாய் பிழைத்துவிடும் என்று கால்நடை மருத்துவர் கூறுகிறாரா? ...."நாய்க்கு ரத்தமா?' ....என்று கவலையோடு இனி கையைப் பிசைந்து கொண்டிருக்க வேண்டியதில்லை....நாய்களுக்கான ரத்த வங்கி தொடங்கப்பட்டுவிட்டது!.... என்ன ஆச்சரியமா இருக்கா?.....ஆமாங்க,....அதுவும் சென்னையில்! 
போக்குவரத்து நெரிசல், இட நெருக்கடி, நகரமயமாக்கல், சாலை மற்றும் வாகன விபத்துகள் காரணமாக செல்லப் பிராணிகள் விபத்தில் சிக்குதல் மற்றும் காயமடைதல் அதிகரித்துள்ளன. இது போன்ற சந்தர்ப்பங்களில் அத்தகைய விலங்குகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு அவற்றுக்கான இரத்த சேமிப்பு அவசியமாகிறது. 
அந்த வகையில் ஆசியாவிலேயே நாய்களுக்கான முதலாவது ரத்த வங்கி சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. ஒரு வயது முதல் எட்டு வரையிலான சுமார் இருபது கிலோ எடைக்குக் குறையாமல் இருக்கும் நாய்கள் இங்கு வந்து ரத்ததானம் செய்து வருகின்றனவாம்! 

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.